பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 86 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 6. உழிஞைப் பட்லம் - (எயில் காத்தலாகிய நொச்சித்திணை பற்றி ஐந்தாவது படலத்துக் கூறப்பட்டது. அதனையடுத்து, அங்ங்ணம் காத்து நிற்பவரை அழித்து வெற்றிகொள்ளும் துணிவோடு, எயிலை முற்றுகையிடுவாரான மறவரின் ஒழுக்கம் இப்பகுதியில் கூறப்படுகின்றது. இவர் உழிஞைப்பூச் சூடித் தம் வினைமேற் செல்வாராதலினால், அவரது ஒழுக்கமாகிய இதுவும் உழிஞை' எனப் பெற்றது.) - - - உழிஞை ஓங்கிய குடைநாட் கோளே வாணாட் கோளே முரசவழிஞை கொற்ற வுழிஞையோ டரசவுழிஞை கந்தழி யென்றா முற்றுழிஞையே காந்தள் புறத்திறை யாரெயிலுழிஞையொடு கோட்புறத் துழிஞை பாசி நிலையே ஏணி நிலையே யிலங்கெயிற் பாசி முதுவுழிஞையே முந்தகத் துழிஞை முற்று முதிர்வே யானைகைக் கோளே வேற்றுப்படை வரவே யுழுதுவித் திடுதல் வாண்மண்ணு நிலையே மண்ணுமங்கலமே மகட்பா லிகலே திறைகொண்டு பெயர்தல் அடிப்பட விருத்தல் தொகைநிலை யுளப்பட இழுமென் சீர்த்தியிருபத் தொன்பதும் உழிஞை யென்மனார் உணர்ந்திசி னோரே. (6) உழிஞை என்னும் திணையும், அதன் துறைகள் இருபத்தெட்டுமாகச்சொல்லப்பட்ட இவை இருபத்தொன்பதும் உழிஞைக்கு உரியனவாம் என்பர் அறிவுடையோர். குடைநாட்கோள், வாள்நாட்கோள், முரசவுழிஞை, கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயிலுழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முதுவுழிஞை, அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானைகைக்கோள்,வேற்றுப்படை வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணு நிலை, மண்ணுமங்கலம், மகட்பால் இகலல், திறை கொண்டு பெயர்தல், அடிப்பட