பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hಲಿಟಿ-೬೬೬೬೬೨೨-Bee೬೨-೬- 87 விருத்தல், தொகைநிலை எனச் சொல்லப்பட்ட இவை இருபத்தெட்டும் உழிஞைக்குரிய துறைகளாம். - உழிஞைத் திணையின் விளக்கம் முடிமிசைஉழிஞை குடிஒன்னார் கொடிநுடங்காரெயில் கொளக்கருதின்று. ஒரு வேந்தன்.தன் முடியின்மேலாக உழிஞை மாலையினைச் சூடிப் பகைவருடைய கொடியசையும் அரணினைக் கைப்பற்றக் கருதியது, உழிஞைத் திணை ஆகும். உழிஞைஒருவகைக் கொடி அதனைச் சூடி வினையினை மேற்கொள்ளலால், இது உழிஞை எனப் பெற்றது. தொல்காப்பியர், எயில் கோடலையும் முற்றலையும் உழிஞையாகவே கொள்வர் என்பது முன்னரே உரைக்கப் பெற்றது. ஆனால், இந்நூல் எயில் முற்றலை உழிஞை எனவும், காத்துக்கோடலை நொச்சி எனவும் கூறுவதை அறிதல் வேண்டும். ചിങ്ങരൂ முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக்-கழிமகிழ்வு எய்தாரும் எய்தி இசைநுவலுஞ் சீர்த்தியனே கொய்தார மார்பினெங் கோ. - 95 மட்டஞ் செய்த மாலையாற் சிறந்த மார்பினையுடைய எம் அரசன், தனது முடியிடத்தே உழிஞை மாலையைச் சூடிக் கொண்டனன். இவன், தன்னொடு பொருந்தாத போர் மன்னரது சிறந்த எயிலினைத் தனது வெல்லும் யானைகள் குத்தி உடைக்க, அளவிறந்த களிப்பினை எய்தாதாரான சான்றோரும் களிப்பெய்திப் புகழ்ந்து கூறுவதற்குக் காரணமான, பெரும்புகழினையும் உடையவன். இது, வேந்தனது உழிஞை குடிய செயலைப் போற்றிக் கண்டோர் உரைப்பதாம். விழுமதில்-பாதுகாவலாற் சிறந்த மதில் இசை-புகழ். - உழிஞைத் திணையின் துறைகள் - 1. குடை நாட்கோள் - செற்றடையார் மதில்கருதிக் கொற்றவேந்தன் குடைநாட்கொண்டன்று. கொற்றத்தையுடைய வேந்தனானவன், தன்னொடு செறுத்துத், தன்னைப் பணிந்து கூடாதவராகிய பகையரசரின் அரணிடத்தைக் கைப்பற்றக் கருதித், தனது வெண்கொற்றக்