பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புறப்பொருள் @ຄorurioreທຄ மூலமும் உரையும். குடையினை நல்ல நாளிலே புறவீடு விட்டது, குடைநாட்கோள் எனப்படும். - - நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர்நிலைபுகுக கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக-வையகத்து, முற்றக் கடியரணம் எல்லாம் முரணவிந்த கொற்றக் குடைநாட் கோள். - 96 உலகிடத்தேயுள்ள காவலனையுடைய அரணிடங்கள் எல்லாம், நம் மன்னன் தனது கொற்றக்குடையிளை நன்னாளிலே புறவீடுவிட்ட அளவானே, முற்றவும் தம்முடைய மாறுபாடு கெட்டன. அதனால், பகைவரின் குருதியாற் சிவப்புற்ற வேல்கள் இனிநெய்யிட்டு அழகுபெறுக!நெடிதானதேர்கள் எல்லாம்தாம் நிற்பதற்குரிய இடங்களுக்குச் சென்று சேர்க கொய்த தலையாட்டத்தினையுடைய குதிரைகளும், கொல்லுந் தன்மையவான களிறுகளும் போர்க்குச் செய்த பண்கள் களையப்படுவனவாக! முரண் அவிதல் திறைதந்து பணிந்து பகைமையினைக் கைவிடுதல், பண் விடுக ஒப்பனையினின்றும் விடுபெற்றனவாக குடைநாட்கோள் எழுந்ததனைக்கண்டு, படைஞருள் சிலர், தம் அரசனது சிறப்பை மிகுத்துக் கூறியது இது. - - 2. வாள் நாட்கோள் கலந்தடையார் மதில்கருதி - வலந்தருவாள் நாட்கொண்டன்று. தன்னொடு நட்புச் செய்து சேராதார்து மதிலிடத்தைக் கைப்பற்றக் கருதி, வெற்றிகொள்ளும் கொற்றவாளினை நன்னாளிலே புறவீடு விட்டது, வாள் நாட்கோள் ஆகும். வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணார் அணிகொள் வனமுலையார் ஆடரங்கம் ஏறிப் பிணிகொள்பேயாடும் பெயர்த்து. 97 நம் மன்னன் தனது க்ொற்றவாளினைப் புறவீடு விடுதலை மேற்கொள்ளலும், தம்முடைய தாழ்வினைச் சொல்லிவந்து அவனையடையாத பகைவருடைய, பிறையினைத் தொடுமளவுக்கு உயரமான அச்சம் விளைக்கின்ற மதிலிடத்தே, அணிகலன் நிறைந்த அழகினைக் கொண்ட வனப்பமைந்த முலைகளையுடைய மகளிர்கள் ஆடிக் களிப்புத் தருகின்ற ஆடிடங்கள், பேய்கள் கைகோத்துக் கால்பெயர்த்து நின்று ஆடுகின்ற நிலையினவும் ஆகிவிடுமே!