பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற்றண்ணளியான் கொள்வான் கொடித்தாளை கொண்டெழுந்தான்- நள்ளாதார் அஞ்சுவரு வாயில் அருமிளைக் குண்டகழி மஞ்சிவரு ஞாயில் மதில். - 99 வெள்ளிய வாளினையும், வீரக்கழல் கட்டிய வலிய கால்களையும், வெய்ய சுடரொளி பொருந்திய வேலினையும் தண்ணளியினையும் உடையவன் நம் உழிஞை வேந்தன். அவன், தன் பகைவருடைய அச்சம்வருதலைச் செய்யும் வாயில்களையும், புகுதற்கரிய காவற்காட்டையும், ஆழ்ந்த அகழியினையும், மேகந்தவழும் ஏவறைகளையும் உடைய அரணத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டாகக், கொடிகளையுடைய தனது படைகளைத் திரட்டிக் கொண்டு, முற்றுகைக்கு எழுந்தான். குண்டு ஆழம், அஞ்சுவருவெருவரு அருமிளை-புகுதற்கரிய காவற்காடு, ஞாயில்-ஏவறை தண்ணளியான் மதில் கொள்வான் கொடித்தானை கொண்டு எழுந்தான் என வருகின்ற முரண்பாட்டின் இனிமையை அநுபவியுங்கள். இதனைக் கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்’ என்பர் தொல்காப்பியர் (புறத். சூ.12). 5. அரச உழிஞை தொழில்காவலன் மலிந்தியலும் பொழில்காவலன் புகழ்விளம்பின்று. காவல் தொழிலிலே சிறப்பு மிக்கவனாக நடக்கின்ற, பூமிகாவலனான உழிஞைவேந்தனின் புகழைச் சொல்வது, அரச உழிஞை ஆகும். . . " ‘. . . . . ஊக்க முரண்மிகுதி ஒன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மவன்கண் அகலாவால்-வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற் - ககப்படாவில்லை யரண். 100 மனவெழுச்சியும், மாறுபாட்டின் பெருமையும் பொருந்திய நல்ல சூழ்ச்சித்திறனும் செல்வப்பெருக்கமும் அவனிடத்திருந்து என்றும் அகலாதனவாம். அதனாற் பெருமையினையும், பிறரால் நகைத்தலுக்கு உட்படாத வெற்றியினையும் நன்மைமிக்க மாலையினையும் உடையவன் இவன். இத்தகைய நம் அரசனுக்கு, அகப்படாதனவாகிய பகைவரது அரண்கள் இனி எதுவுமே இல்லையாம்! . - . . தொல்காப்பியர் கூறும், உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் (புறத்கு 12) என்பதோடு ஒப்புடையது இது.அஃதாவது