பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uါgiဇံ கேசிகன் : உழிஞைப் படலம் - 91


குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை, அவன் படைத்தலைவன் முதலியோரும், பகை மன்னர்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தல் . . 6. கந்தழி மாவுடைத்தார் மணிவண்ணன் சோவுடைத்த மறநுவலின்று. வண்டினையுடைய மாலையாற் சிறந்தவனும், நீலமணி போன்ற மேனியை உடையவனுமான திருமால், சோ என்னும் அரணினைச் சிதைத்த மறத்தினைச் சொல்லியது, கந்தழி எனப்படும். . . . . . 'கந்தினை அழித்தலால் கந்தழி என இவர் கொண்டனர். கந்தழி என்பதனை, ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள் எனக் கூறிப் பாடாண் திணையுள் தொல்காப்பியர் கூறுவர். இரண்டின் வேறுபாட்டையும் உணர்க. அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து இன்றிவன் மாறா எதிர்வார்யார்-என்றும் மடையார் மணிப்பூண் அடையாதார் மார்பிற் சுடராழி நின்றெரியச் சோ. . . மூட்டார்ந்த மணியணியை உடைய பகைவரது மார்பிடத்தே, சுடருகின்ற தன் சக்கரப்படையானது நின்று அழலா நிற்பச் சோ வென்னும் அரணத்தை அந்நாளிலே அழித்தவனும் இவனே! அதனால், தம் அரண் வலியுடையதென்று தேறி, இன்றும், இவனைப் பகையாகக் கொண்டு எதிர்த்து நிற்பார்தாம் யாவரோ? 101 இஃது உவமையன்று மிகுதி கூறியது என்பது பழைய உரை. திருமாலே இம் மன்னனாக வந்துள்ளான் எனத் தம் மன்னனது ஆற்றலை மிகுத்து உரைத்தது இது. சேர்’ வாணாசுரனுக்கு உரித்தாயிருந்த அரண். இந்த வெற்றியை வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும் எனச் சிலம்பு உரைக்கும். 16:54-5) - - 7. முற்றுழிஞை ஆடியல் அவிர்சடையான் சூடியபூச்சிறப்புரைத்தன்று. - அசையும் தன்மையினை உடைத்தாய் விளங்கும் சடையினை உடையானான சிவபிரான், திரிபுரத்தை அழித்த போது சூடிய . பூவினது சிறப்பினை உரைப்பது, முற்றுழிஞை ஆகும்.