பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் t மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே இயங்கரண மூன்றும் எரித்தான்-தயங்கிணர்ப் பூக்கொள் இதழிப் புரிசெஞ்சடையானும் மாக்கொள் உழிஞை மலைந்து . . 102 விளங்காநின்ற கொத்தாகப் பொலிவுகொண்ட கொன்றை மாலையை உடைய, புரிந்த செஞ்சடையானான சிவபிரானும், பெருமைகொண்ட உழிஞைமாலையைச் சூடிக் கொண்டு சென்றல்லவோ, அந் நாளிலே திரிபுரங்கள் மூன்றையும் எரித்து அழித்தான்! மருளாத உழிஞையின் சிறப்பினை வேறு யார் தாம் உணரவல்லார்? . - புரிதல்-பின்னுதல்.சிவபிரானே அரணங்களை அழிக்கு முன் சூடிச் சென்றது இந்த உழிஞைமாலை, ஆகவே, இதன் பெருமையினை வேறு யார்தாம் அறிதற்கு இயலும்?' என்று, அதன் சிறப்பைக் கூறினர். அத்துடன், அவன் திரிபுரங்களைத் தீயெரியூட்டிச் சிதைத்தாற் போலவே, இவனும் பகையரண்களை எரியூட்டி அழிப்பான் என்பதும் உரைத்தனர். i 8. காந்தள் • . கருங்கடலுள் மாத்தடிந்தான் செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று. - . கறுத்த கடலினிடத்தே மாவாகிநின்ற சூரனை அழித்த, முருகன் சூடிய செழுமையான காந்தட்பூவினது சிறப்பினைச் சொல்லிப் போற்றுவது, காந்தள் ஆகும். வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும் எனத் தொல்காப்பியர் பொதுவியலுள் கூறுகின்ற காந்தள்துறையினையும் நோக்கி, இவற்றின் வேறுபாட்டை அறிக (புறத். சூ.5) குருகு பெயரிய குன்றெறிந் தானும் உருகெழு காந்தள் மலைந்தான்-பொருகழல் கார்கருதி வார்முரசம் ஆர்க்கும் கடற்றானைப் போர்கருதி யார்மலையார் பூ. 103 குருகினது பெயரினையுடைத்தான கிரவுஞ்ச மலையினை அழித்த முருகக் கடவுளும், அழகுமருவின காந்தட்பூ மாலையினைச் சூடிய போற்மேற் சென்றான். வீரக்கழலினை உடையதாய், வாரால் பிணித்த வீரமுரசம் முகிலையொத்து முழங்கும் கடல்போன்ற படையிடத்துப் போரினை நினைந்து செல்வாருள் யார்தாம், அடையாளப் பூவினைச் சூடிச் செல்லாதார்?