பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தெளிவை உண்பிக்க, மூட்டுவாயாற் சிறந்த கழலினையுடைய உழிஞையாரின் கண்கள் கனலினைச் சொரிய, அரணிடத்தார் பலரும்படப் போரினைச் செய்தாலும், வெற்றி பெறுதல் அரிதே யாகும்! - - 'மயிற்கணத் தன்னார்.பாடிவிட்டிலே மறவர்க்குக் கள் வார்த்திருந்த பணிப்பெண்கள். வென்றியரிது’ என்றவர் ஒற்றர். எயிலது கடத்தற்கரிய திண்மையை உரைத்தலால், ஆரெயில் உழிஞை ஆயிற்று.கயில்-மூட்டுவாய். - 11. தோல் உழிஞை வென்றியொடு புகழ்விளைக்குமெனத் தொன்றுவந்த தோல்மிகுத்தன்று. வெற்றியோடே புகழினையும் விளைவிக்கும்’ என்று சொல்லித், தொன்றுதொட்டுவந்த கிடுகுப்படையை உழிஞையார் சிறப்பித்தது, தோல் உழிஞையாகும். நின்ற புகழொழிய நில்லா உயிரோம்பி - இன்றுநாம் வைகல் இழிவாகும்-வென்றொளிரும் பாண்டி னிரைதோல் பணியார் பகையரணம் வேண்டின் எளிதென்றான் வேந்து. 106 வென்று விளங்கும் கண்ணாடி நிரைத்த நம் கிடுகுப் படை, நம்மைப் பணியாதவருடைய பகைமைகொண்ட அரணத்தைக் கைப்பற்ற விரும்பினால், அது எளிதே' என்றான் நம் வேந்தன். அங்ங்ணம்நிலைபெற்ற நம்புகழ் கெட்டுப்போம்படியாக, நில்லாத உயிரினைப் பாதுகாத்தபடி, இந்நாளிலே நாம் இந்த எயிற்புறத்தே வறிதே பாடியிருத்தல் இழிவாகும் அன்றோ! - - கிடுகுப்படைத் தலைவருள் ஒருவனது கூற்று இது. தோற்படையின் சிறப்பை மிகுத்துக் கூறுவதனால்,தோல் உழிஞை ஆயிற்று. - 12. குற்றுழிஞை-1 கருதாதார் மதிற்குமரிமேல் ஒருதானாகி யிகன்மிகுத்தன்று. - . பகைவரது அரணாகிய அழிவற்ற ஒன்றின்மேல், தான் ஒருவனுமேயாகி நின்று, உழிஞை மறவன் ஒருவன், தன் மாறுபாட்டினைப் பெருக்கியது, குற்றுழிஞை ஆகும். இதனை, ஒருதான் மண்டிய குறுமை என்பர் தொல்காப்பியர் (புறத். சூ.12) - -