பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 14. குற்றுழிஞை-3 பாடருந்தோற் படைமறவர் ஆடலோடடையினும் அத்துறையாகும். சொல்லுதற்கரிய கிடுகுப்படையினை உடைய உழிஞை மறவர்கள், ஆடுதலுடனே அரணினைக் குறுகினாலும், அது குற்றுழிஞை ஆகும். - - j ஆடலோடடைதல் நொச்சியாரது எதிர்ப்பு இன்மையால், இது, உழிஞை மறவர் தம் மறமாண்பு காட்டுமுன்பே வந்துறும் எளிய வெற்றியாதலால், குற்றுழிஞை ஆயிற்று. - நிரைபொறி வாயில் நெடுமதிற் சூழி வரைபுகு புள்ளினமான-விரைபடைந்தார். வேலேந்து தானை விறலோன் விறன்மறவர் தோலேந்தியாடல் தொடர்ந்து. 109 வேலினை உயர்த்த படைமறவரான் மிக்க வெற்றியினை யுடைய உழிஞை மன்னனது வெற்றிவீரர்கள், கிடுகுப்படை யினைக் கைகளிலே ஏந்திக் கூத்தாடுதலைத் தொடர்ந்தவராக, ஒழுங்குபட்ட பொறிகளையுடையதும் வாயில்களையுடையது மான நெடிய மதிலிடத்தின் உச்சியிலே, மலையுச்சியிற் சென்றுபுகும் புள்ளினத்தையொப்ப, விரையச் சென்று அடைந்தனர். - சூழி-உச்சி, ஆடல் தொடர்ந்து' என்றது, ஆடலினைச் சூழ்ந்தவராக என்றவாறு. - 15. புறத்துழிஞை விண்தோயுமிளைகடந்து குண்டகழி புறத்திறுத்தன்று. . . " . வானிடத்தே தோயும் காவற்காட்டைக் கடந்து, ஆழ்ந்த அகழியின் கரைப்புறத்தே உழிஞைப்படை சென்று தங்கியது, புறத்துழிஞை எனப்படும். புறத்திறைக்கும் புறத்துழிஞைக்கும் வேறுபாடு கருதித் தெளிக, மதிற்புறத்துச் சென்று தங்குவதெல்லாம் புறத்திறை, மிளைகடந்து குண்டகழியின் புறத்தே தங்குவது புறத்துழிஞை. கோள்வாய் முதலைய குண்டகழி நீராக - வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்-நீள்வாயில் ஓங்கலரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப ஆங்கொலரிய வமர். . 110