பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் : 2-ßsoESL ut-sod - . 97 . வாய்த்த வெற்றிச் சிறப்புடைய வாளினை ஏந்திய மறமன்னன், ஆளைப் பற்றிக் கொள்ளுதலைத் தப்பாத முதலைகளையுடைய ஆழமான அகழிநீரே தன் படைஞர்க்குரிய குடிக்கும் நீராகுமாறு, அதன் கரையிடத்தே வந்து தங்கினான்; நீண்ட வாயிலாற் சிறந்த அரணிடத்தே யுள்ள ஒள்ளிய வளையினை உடையாரான மகளிர்கள் சுடுமூச்செறியும்படி, வெல்லுதற்கு அரிய கொடிய போரும் இனி நிகழும் போலும் உழிஞையாரின் புறத்துழிஞையைக் கண்டவர், மேல் வரும் போரினைக் கருதி உரைத்தது இது. •. . - 16. பாசி நிலை - அடங்காதார் மிடல்சாயக் கிடங்கிடைப் போர்மலைந்தன்று. பகைவருடைய வலி கெடும்படியாக, உழிஞை மறவர் அகழியிடத்தே போரினை மேற்கொண்டது, பாசிநிலை எனப்படும். - நொச்சியாரது மறனுடைப் பாசி என்னும் துறையினையும் இதனையும் ஒப்பிட்டுத் தெளிதல் வேண்டும.ஒதுங்கியும் தூர்ந்தும் இருதிறப் படைஞரும் போரிடலால், இது பாசிநிலை எனப் பெற்றது. - . நாவாயுந் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார் ஒவார் விலங்கி உடலவும்-பூவார் அகழி பரந்தொழுகும் அங்குருதிச்சேற்றுப் . . பகழிவாய் ஆழ்ந்தார் பலர். . 111 ஒடமும் ஒருமரத் தோணியும் மேல்கொண்டு, பகை மறவர் ஒழிவற்றாராய்த் தம்மைத் தடுத்து வெகுண்டு போரிடவும், மலர்நிறையும் அகழியிலே மிக்கோடும் அழகிய குருதிச்சேற்றிலே அப்பகைவரது அம்பின் வாய்ப்பட்டு வீழ்ந்தவர்கள், உழிஞையாருள் பலராவர் : . - பலர் வீழ்ந்தபோதும், வென்றியே குறித்தவராக மேன்மேல் எதிர்ந்து உழிஞையார் போரிட்டனர் என்பது குறிப்பு உடலல். சினத்தல்.விலங்கி-குறுக்கிட்டும் ஆம் , 17. ஏணி நிலை தொடுகழன்மறவர் துன்னித்துன்னார் இடுகுட்டிஞ்சியின் ஏணிசாத்தின்று. . . . தொடுத்த கழலினை உடையவரான உழிஞை மறவர், அரணை அணுகிச் சென்று, பகைவர் பண்ணின