பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * *-planess ul-wo - 10 - அகத்தோனாகிய நொச்சி வேந்தனது, காலைப்போதிலே முழங்குகின்ற முரசமானது முழங்க, அதனைக் கேட்டுப் புறத்தோனாகிய உழிஞை வேந்தன்பால் எழுந்த வெய்ய சினத்தினது மிகுதியைச் சொல்லியது, முற்று முதிர்வு ஆகும். காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று . வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்-மாலை அடுகம் அடிசிலென்றம்மதிலுள் இட்டார் . தொடுகழலார் மூழை துடுப்பு. - 117 காலை முரசமானது பகையரணின் உள்ளேயிருந்து ஒலிக்க, அதனைக்கேட்டுக் கண்கள் கனன்றவனாகத் தன்னுடைய வெற்றி வேலினை வெற்றியை விரும்புவோனாகிய உழிஞை வேந்தன் நோக்கினான்; நோக்குதலும், கட்டிய கழலினை உடையவரான உழிஞை மறவர்கள், இன்று மாலைப் போதிலே யாம் சோறு அடுவோம்’ என்றவராக, அரணினுள்ளே தம்முடைய மூழையினையும் துடுப்பினையும் எறிந்தார்கள். மாலைக்குள் அரணை வென்று கைப்பற்றி, அதன்பின்னரே சோறாக்கி உண்போம் எனச் சினந்து எழுந்தனர் உழிஞை மறவர் என்க. மூழைஅகப்பை. - - 23. யானை கைக்கோள் மாறுகொண்டார் மதிலழிய . ஏறுந்தோட்டியும் எறிந்துகொண்டன்று. . பகைகொண்டாரது அரண்மதில் அழிந்ததாக, உழிஞையார், . அவர்களுடைய களிறுகளையும் காவல்களையும் வென்று கைக்கொண்டது, யானை கைக்கோள் ஆகும். . ஏவல் இகழ்மறவர் வீய இகல்கடந்து காவலும் யானையும் கைக்கொண்டான்-மாவலான் வம்புடை ஒள்வாள் மறவர் தொழுதேத்த அம்புடை ஞாயில் அரண். 118 - குதிரைத் தொழிலிலே வல்லவனான உழிஞையான், கச்சினையுடையவரான தனது ஒள்ளிய வாள்வீரர்கள் தன்னைத் தொழுது போற்றுமாறு, அம்புகளையுடைத்தான ஏவறைகளை யுடைய பகையரணை அழித்து, தன்னுடைய ஏவலை - இகழ்ந்தாரான நொச்சி மறவர்கள் பட்டொழியும்படியாக, அவர்தம் மாறுபாட்டைக் கடந்து, அவ்விடத்துக் காவலையும் யானைகளையும் தான் கைப்பற்றிக் கொண்டான்.