பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 'ஏறுந் தோட்டியும்’ என்பதற்கு, வெண்பாவில் வரும் காவலும் யானையும் என்பதையொட்டிப் பொருள் கொள்ளப் பெற்றது.தோட்டி காவல் என்ற பொருளிலே வருவதும் காண்க . . 24. வேற்றுப்படை வரவு மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப் பெய்தார் மார்பிற் பிறன்வரவுரைத்தன்று. போரிடத்தே மிக்கு விளங்கும் வேற்படையினை உடையோனாகிய உழிஞை மன்னன், முற்றுகையை விட்டு நீங்குமாறு, மாலையிட்ட மார்பினையுடைய வேற்று வேந்தனது வரவினைச்சொல்லியது, வேற்றுப்படை வரவு ஆகும். உவனின்றுறுதுயரம் உய்யாமை நோக்கி அவனென்றுலகேத்தும் ஆண்மை-இவனன்றி மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம் - முற்றியார் முற்று விட . - 119 அப்படிக்கொத்தவன் அவன் என்று சொல்லி உலகம் போற்றுகின்ற ஆண்மைச் செயலினை, இதோ வரும் இவனையன்றி மற்று யார்தான் செய்ய வல்லவர்? இந் நொச்சி மன்னன். இந்நாளிலே அடைந்த துயரத்தினின்றும் உய்யாமற் போகின்ற தன்மையினை நோக்கி, மேகந் தவழும் நெடிய மதிலை முற்றியவர்தம் முற்றுகையை விட்டொழித்தலைச் செய்யுமாறு, துணையாகி வந்தனனே! நொச்சியானுக்கு உதவியாக வந்த வேற்றரசனின் படை வரவைக் கண்டார் கூறியது இது வேற்றுப்படை வரவுதான் கூறியிருக்கிறது; இது வென்றதும் தோற்றதும் கூறப்படவில்லை. அங்ங்ணம் கூறுங்கால், இவர் உழிஞையாராக, அரணைக் கைக்கொண்டிருக்கும் உழிஞையார் நொச்சியாராக அவரது ஒழுக்கம் மாறுபடுதலையும் நினைக்க - . 25. உழுது வித்திடுதல் எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித்து உண்ணாவரகொடு கொள்வித்தன்று. தாம் அழிதலை எண்ணாரான பகைவரது பலவான அரண்களையும் இடித்து, அவ்விடத்தைக் கழுதைபூட்டிய ஏரானே உழுவித்துக், கவடியும் குடைவேலும் விதைத்தது, உழுது வித்திடுதல் ஆகும். உண்ணாவரகுகவடி;கொள்குடைவேல். -