பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 27. மண்ணு மங்கலம் வணங்காதார் மதிற்குமரியொடு மணங்கூடிய மலிபுரைத்தன்று. தன்னைப் பணியாதாரான பகைவரது அரணாகிய கன்னியுடன் உழிஞை வேந்தன் மணங்கூடிய மிகுதிப் பாட்டைச் சொல்லியது, மண்ணுமங்கலம் ஆகும். - - மதிற் குமரி என்றது, அதுவரை பிறராற் கொள்ளப்படா மையினைச் சொல்லுதற்கு எங்கண் மலர எயிற்குமரி கூடிய மங்கல நாள்யாம் மகிழ்துங்கக்-கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் குடி. 122 எம்முடைய கண்கள் மலர்ச்சிகொள்ள, இந்த எயிலாகிய குமரியை இவ்வேந்தன் மணங்கூடிய மங்கல நாளிலே, யாம் மேலும் மகிழ்ச்சியடையுமாறு, மதுவலரும் வெற்றி மாலையினையும் கையாற் செய்யப்பட்டு ஒளிசிறந்த அணிகலன்களையும் பூண்டவனான உழிஞை மன்னவனது, சிவந்த அடிநிழலின் கீழாகச் செறிந்த சுடரொளியால் நிறைந்த அணிகலன்களையுடைய அரசர்களது முடிகளும் தங்கினவே உழிஞை மறவருள் ஒருவன், தன் வேந்தனின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்ததுடன், பிற மன்னர் தன் வேந்தனைப் பணிந்ததனையும் கண்டு கூறியது இது. மங்கல நாள்-மணநாள். 28. மகட்பால் இகல் மயிற்சாயன் மகள்வேண்டிய - கயிற்கழலோன் நிலையுரைத்தன்று. - நொச்சியரசனது மயில்போன்ற சாயலையுடைய மகளை விரும்பிய, மூட்டுவாயாற் சிறந்த கழலினனான உழிஞை வேந்தனின் நிலைமையைக் கூறியது, மகட்பால்இகல் ஆகும். - அந்தழையல்குலும் ஆடமை மென்தோளும் பைந்தளிர் மேனியும் பாராட்டித்-தந்தை புறமதில் வைகும் புலம்பே தருமே மறமதில் மன்னன் மகள். 123 மறப்பண்பே தனக்கு அரணாகவுடைய நொச்சி மன்னன்து மகள், உழிஞை வேந்தனுக்கு, அவளுடைய அழகிய தழையாடையைக் கொண்ட அல்குலையும், அசையும் மூங்கில்