பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * உழிஞைப் படலம் — 107 உலகிடத்தே, அதுகாறும் அடியடைந்து ஏவலை ஏற்றுக் கொள்ளாது மாறுபாடு புரிந்த பகைமன்னர் அனைவரும், அதன்பின், அவன் முன்னே வந்து பணிந்து நின்று, தம்முடைய மாறுபாடு அவிந்தாராக ஆயினர். - - நாவல் பெயரிய ஞாலம் - சம்புத் தீவு. தொகுத்து உரைத்தல் இதுகாறும், பகைவேந்தர் அரணிடத்தே காவலுடன் அமைந்தாராக, அவரை வென்று அடிமைப்படுத்துவான் வேண்டி, அவ்வரணை முற்றுகையிட்டுச் செயல்முடித்த உழிஞை வேந்தனது ஒழுகலாறுகளான உழிஞைத்திணையின் கூறுபாடுகள் பலவும் உரைக்கப்பட்டன. கொற்றக் குடையினை நன்னாளிற் புறவீடு விடுதலாகிய குடை நாட்கோள்; கொள்ள வாளினை நன் முழுத்தத்தே புறவீடு விடுதலாகிய வாள் நாட்கோள்; கொற்ற முரசத்தை அவ்வாறே புறவீடு விடுதலாகிய முரசவுழிஞை, பகையரணைக் கொள்ளுதலைக் குறித்துப் படையொடு செல்லலாகிய கொற்றவுழிஞை . உழிஞை வேந்தனது புகழினைப் பாராட்டுதலாகிய அரசவுழிஞை, திருமால் சோவரணைச் சிதைத்தது கூறுதலாகிய கந்தழி; சிவபிரான் திரிபுரத்தை எரித்தது கூறுதலாகிய முற்றுழிஞை முருகப்பிரான் சூரனை அழித்தது கூறுதலாகிய காந்தள்; - - உழிஞையானின் படைப் பெருக்கம் பகையரணின் புறத்தே சென்று தங்குதலாகிய புறத்திறை, பகைவரது அரணது காவன் மறவரின் நிலையுரைத்தலான ஆரெயில் உழிஞை, தொன்றுதொட்டு வீரம் விளைத்து வந்த கிடுகுப்படையைப் பாராட்டலாகிய தோல் உழிஞை பகைவரது, அதுவரை பிறராற் கொள்ளப்படாத மதிலின் மேல் வீரன் ஒருவன் ஒற்றைத் தனியனாக நின்று செருச் செய்து அதனால் பாறுபாட்டை மிகுவித்தல், காவற் காட்டைக் கடந்து புகுதல், ஆடலோடு அரணைச் சார்தல் ஆகிய குறுவஞ்சிகள் காவற்காட்டைக் கடந்து அரணின் புறத்தே சேர்ந்து தங்குதலாகிய புறத்துழிஞை அகழியிடத்தே இருசாராரும் பொருதலாகிய பாசிநிலை மதின்மேல் ஏணி சார்த்தலாகிய ஏணிநிலை ஏணிமேல் ஏறுவார் தடுப்பாருடன் பொருதவாறே மேலேறிச் செல்லலாகிய எயிற்பாசி;