பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தும்பை அரவம் தானை. மறம், யானைமறம், குதிரை மறம், தார் நிலை,தேர் மறம், பாண்பாட்டு, இருவரும் தபு நிலை, எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு, முன் தேர்க் குரவை, பின் தேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை, வெருவரு நிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல், தொகை நிலை ஆகியன உழிஞையின் துறைகளாம். தொல்காப்பியம் இதனைப் பன்னிரு துறைகளுள் உட்படுத்தும் (புறத். சூ.17). . . தும்பைத் திணையின் விளக்கம் செங்களத்து மறங்கருதிப் பைந்தும்பை தலைமலைந்தன்று . மறம் மேம்பாட்டைக் கருதிக், குருதியாற் சிவந்த போர்க்களத்தின் கண்ணே,வேந்தன் ஒருவன்,பசியதும்பையாகிய போர்ப்பூவினைத் தலையிடத்தே சூடியது, தும்பைத் திணை ஆகும். கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி குழா நிலநனைப்பப்-போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் துகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து. . 127 குற்றம் தீர்ந்த புகழினையும், வெம்மை மிகுந்த படையினையும் உடையான் எம் வேந்தன்; அவன், கார்மேகத்தை ஒப்பாகக் குறித்து ஒழியாதே நின்று முழங்குகின்ற ஆரவாரத்தாற் சிறந்த வீரமுரசத்தினையும் உடையவன். இப்போது, ஒழுகும் குருதியானது சூழ்ந்து போரிடும் களத்தினை நனைப்பப் போர்செய்தலைக் கருதினான். அதற்கு அடையாளமாகத் தும்பைப்பூ மாலையையுஞ் சூடினான். துப்பு-வலிமை. வெப்பு-வெம்மை. துகள்-சிறு குற்றம். தும்பைத் திணையின் துறைகள் - 1. தும்பை அரவம் பொன்புனைந்த கழலடியோன் தன்படையைத் தலையளித்தன்று. பொன்னினாலே இயற்றப்பெற்ற வீரக்கழலை அணிந்திருக் கின்ற காலினை உடையவனான மன்னன், தனது படையைத் தலையளி பண்ணியது, தும்பை அரவம் ஆகும்.