பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் எறியும் மாறுபாட்டினையுடைய வேற்படையினைக் கொண்டவனானதும்பைவேந்தனது, மாறுபாட்டினைச்செய்யும் போரின்கண், போர்க்கலை செறிந்த குதிரையினது திறத்தைச் சொல்லுவது, குதிரைமறம் ஆகும். எறிபடை-கொல்லும் வேற்படை இதனை உடையான் தும்பை வேந்தன். குதிரைமறத்தைக் குறித்து, அதனாற் பகைப்படைக்கு வரும் அழிபிற்கு இரங்கியது இது. நொச்சித் திணையுள் வரும் குதிரை மறத்திற்கும் இதற்கும் அமைந்த வேறுபாட்டை அறிக. - குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார் வந்த வகையறியா வாளமருள்-வெந்திறல் ஆர்கழல் மன்னன் அலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும். 133 வெய்தான வலியினையும், நிறைந்த வீரக்கழலினையும் உடையவன் தும்பை வேந்தன்; இவனுடைய அசையும் தலையாட்டத்தையுடைய குதிரையானது, பகைவருடைய குந்தப் படையும், கொடிய விற்படையும், குருதியளைந்த வேற்படையும், தாம் வந்த வகையறியாது நிலைகலங்கித் தலைமயங்கிய வாட்போரினுள், கொடிய வில்லிலே தொடுத்து விட்ட நீண்ட கணையினைப் போல முற்பட்டுப்பாய்ந்து வருமே! கணையினும் கடுவிரைவுடன் வரும் எனக் குதிரை மறத்தை உரைத்து, அதனால் வரும் பகைப்படை அழிபிற்கு இரங்கினான் உழிஞை மறவருள் ஒருவன் என்க. குந்தம்-ஈட்டி போன்ற ஒருவகைப் படைக்கலன் சவளம் என்பர் பழைய உரைகாரர். • 7. தார்நிலை-1 முன்னெழுதருபடைதாங்குவனென மன்னவற்கு மறங்கிளந்தன்று. ஒருமறவன்,தும்பை மன்னனுக்கு முற்படஎழுந்துவருகின்ற பகைவரது தூசிப்படையினை யானே தடுப்பேன்’ எனத் தனது தறுகண்மையைச் சொல்லியது, தார்நிலை ஆகும். உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின் சிறுசுடர்முற்பேரிருளாங்கண்டாய்-எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே நின்னொடு பாங்கலா மன்னர் படை. - 134 . எறிதற்குரிய ஒளிகாலும் வேலினையும், தேன்மலர்ந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! நின்னோடும்