பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u၏ufဇံ ၆ဧါဧ၏။ * န္ဟစ်စေu႕ uL-လစ် 115 உறவல்லாத வேந்தர்களது படையெல்லாம், யான் மிக்க ஒளியினையுடைய வாளுடனே ஒருகால் எதிர்நின்று தடுப்பேனாயின், சிறு சுடரினது முன்னர் அகன்றுபோம் பேரிருளைப்போலக் கெட்டழியும் என்பதனைக் காண்பாயாக! உழிஞை மறவன், சிறுசுடர் முன் பேரிருள் போலக் - கெட்டழியுமாறு, யான் ஒருவனாகவே பகைப்படையை ஒழிப்பேன்’ என்று கூறிய மறமாண்பால்,இதுதார்நிலை ஆயிற்று. - 8. தார்நிலை-2 ஒருகுடை மன்னனைப்பலகுடைநெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே. ஒப்பற்ற கொற்றக்குடையினை உடையவனான தன் வேந்தனைப், பலகுடை மன்னர்களும் ஒருங்கே வந்து நெருங்கிய போரிடத்து, உழிஞை மறவருள் ஒருவன், தான் ஒருவனாகவே நின்று அவர்களைத் தடுத்தலும், தார்நிலை என்னும் துறை ஆகும். காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல் வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே-தோலா இலைபுனை தண்டார் இறைவன்மேல் வந்த மலைபுரை யானை மறிந்து. - 135. தோல்வியே அறியாத இலையால் தொடுத்த மாலையினை யுடைய, அரசனின் மேலாக வந்த மலைபோன்ற யானைகள் எல்லாம், அம்மன்னனது வேல்வீரன் ஒருவனின் கையகத்து வேல் தாக்குதலால், காற்றாலே நிலைகுலைந்து கதிர் மண்டிலத்தை மறைத்தகரியமேகங்களைப் போலக் கீழ்மேலாய்நிலைகுலைந்து வீழ்ந்தனவே! - கால்-காற்று. வேலன் கை வேல்பட யானை வீழ்ந்தனவே - என்றதனால், இது தார்நிலை ஆயிற்று. 'தார்’ என்றது தூசிப்படையினை. - - 9. தேர் மறம் முறிமலர்த்தார் வயவேந்தன் செறிமணித்தேர்ச்சிறப்புரைத்தன்று. தளிர்விரவின மாலையினையுடைய வலிய வேந்தனது, செறிந்த மணிகளையுடைய தேரின் சிறப்பினைச் சொல்லியது தேர்மறம் ஆகும். * - - செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம் அருமுரண் ஆழி தொடர-வருமரோ }