பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர் ஒட்டார் புறத்தின்மேல் ஊர்ந்து. - கட்டுதற்றொழில் மிகுந்த மணங்கமழும் மாலையினை உடையானானநம் வேந்தனது அழகிய தேரானது, பகைவருடைய பிணப்புறத்தின் மேலாக நடந்து, போர்த் தொழிலால் மிகுந்த வெவ்விய களத்தினிடையே, செவ்விய குருதிவெள்ளமானது கிட்டுதற்கரிய மாறுபாட்டையுடைய தேருருளைத் தொடர வரா நிற்ப, வந்து கொண்டிருக்கும்! - - தேர் ஊர்ந்து வருகின்ற நிலையைச் சொல்லுகிறான், கண்டான் ஒருவன். சக்கரம் பதிந்த தடத்தோடே பகைவரது செங்குருதி வெள்ளமாகத் தொடர்ந்துவரத் தேர் சென்றது எனத் தேர்மறங் கூறியதும் காண்க தேர், பகைப்படையைச் சிதைத்த மறமாண்பும் கூறப்பட்டது. 10. பாண்பாட்டு வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக் கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று. யாழினை இசைக்கின்ற கைத்தொழிலிலே வல்லவரான பாணர், குருதி வெள்ளத்தாற் சிவந்த போர்க்களத்திடையே, பகைவருடைய களிறுகளைக் கொன்று அப்போரிடையே தாமும் பட்டு வீழ்ந்தாரான தும்பை மறவர்கட்குச் செய்யுங் கடனைச் செய்து அவர் புகழைப்பாடுவது, பாண்பாட்டு ஆகும். 136 தளரியல் தாய்புதல்வர் தாமுண ராமைக் களரிக் கனன்முழங்க மூட்டி-விள்ளிப்பண் கண்ணினார் பாணர்களிறெறிந்து வீழ்ந்தார்க்கு I விண்ணினார் செய்தார் விருந்து. - - 137 - போர்க்களத்திலே, பகைவரது களிற்றினைக் கொன்றுதாமும் பட்டு வீழ்ந்த தும்பை வீரருக்குத் துறக்கத்தே உள்ளவர்கள் விருந்து செய்தனர்; பாணர்களோ, தளர்ந்த இயல்பினையுடைய அவர்தம் மனைவியும் தாயும் புதல்வரும் தாம் அவ்வீரர் களத்துப்பட்டதை அறியாமையாலே, களத்திலே அவருடற்கு நெருப்பினை முழங்க மூட்டிச், சாப்பண்ணைப் பாடுதலையும் கருதினார்கள். - - விளரிப்பண்-இரங்கற்பண். இதனைப் பாடுதலும் உடற்கு எரியிடுதலும் செய்தலால், இத்துறை பாண்பாட்டு ஆயிற்று.தாம் உணராமைக் களரிக்கனன் முழங்க மூட்டி, என்பதற்கு, அவர் உணரின் உறுகின்ற வேதனைக்கு இரங்கி,அவர் உணராமற்படிக்கு உடற்கு எரியூட்டினர் பாணர் எனவும் பொருள் கொள்ளலாம்.