பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

usuissanaa * zinauiu-se 117 11. இருவரும் தபுநிலை பொருபடை களத்தவிய . இருவேந்தரும் இகலவிந்தன்று. . போர் செய்த இருதிறத்துப் படைகளும் களத்திலே கெட்டழியப், போரிட்ட வேந்தர்கள் இருவரும், தாமும் களத்திலே போரிட்டு வீழ்ந்து தம்மாறுபாடு அவிந்தது.இருவரும் தபுநிலை ஆகும். . . . - - . மன்னர் இருவரும் பட்டனராகவே, இருவரும் தபுநிலை ஆயிற்று. இதனை அறிந்தார் இரங்குவர் என்பது குறிப்பு. காய்ந்து கடுங்களிறு கண்கலைக் ഞ88.4 . வேந்தர் இருவரும் விண்படர-ஏந்து பொருபடை மின்னப்புறங்கொடா பொங்கி . . . இருபடையும் நீங்கா இகல். 138 பகைத்துப் பொருத மன்னர்கள் இருவரும், கடிய போர்க்களிறுகள் கண்ணழலக் கைகலந்து விண்ணினைச் சேர்ந்தாராக, தாம் ஏந்திய போரிடும் படைக்கலன்கள் மின்னுமாறு,அவரது இருதிறத்துப்படைகளும் புறங்கொடுத்துப் போகாவாறு வெகுண்டு, தம் மாறுபாடு நீங்காவாய்ப் பொருது, தாமும் களத்தே பட்டன! - - . . அரசும் படையும் இருதிறத்தும் பட்டதனைக் கண்டு பிறர் இரங்கியது இது. இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் (புறத் 17) என்ற தொல்காப்பிய விதியையும், இருபெருவேந்தர் தானைத் தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார் தாங்குதலேயன்றி, அத் தலைவரிருவருந் தம்மிற் பொருது வீழ்தல் இதுவென நச்சினார்க்கினியர் உரைக்கும் விளக்கத்தையும், ஒப்பிட்டுக்கருதுக. . . 12. எருமை மறம் . - வெயர்பொடிப்பச்சினங்கடைஇப் பெயர்படைக்குப்பின்னின்றன்று. . . வேர்வை அரும்பும்படி சினத்தைச் செலுத்தியவாறு,தும்பை மறவன் ஒருவன், முதுகிட்ட தன் படைக்குப் பின்னே நின்றது, எருமை மறம் ஆகும். . . . . . கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி நெடுங்கைப்பிணத்திடைநின்றான்-நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்மை வேலூன்றி வாள்வெள்ளந்தன்மேல் வர 139