பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தறுகண்மை மிக்கானாகிய தும்பை மறவன், கண்டோர் நடுக்கமுறும் கொடுமையதான போரிடத்தே, காலாள் வெள்ளமானது முதுகிட்டுப் போகவும், தான் அவற்றுடன் போகானாகிப், பகைவரின் வாள்வீரரது வெள்ளம் தன்மேல் அடர்ந்துவராநிற்பவும், நெருப்புப்போல விழித்துச் சினந்து, தன் கைவேலை ஊன்றியவாறே, நெடுங்கைகளை உடைய யானைப் பிணத்தின் நடுவே நின்றான்! 'உடை படை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழை தாங்கிய எருமையும் என்பர் தொல்காப்பியர் (புறத்.17). தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று, அங்ங்னம் கெடுத்த மாற்றுவேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாங்கின. கடாப்போலச் சிறக்கணித்து நிற்கும் நிலைமை என்ற நச்சினார்க்கினியரின் உரையினை இதனுடன் நோக்கி, இதனைத் தெளிதல் வேண்டும். கடாப்போலச் சிறக்கணிந்து நிற்கும் நிலையால், எருமை மறம் ஆயிற்று. . 13. ஏம வெருமை குடைமயங்கிய வாளமருள் படைமயங்கப் பாழிகொண்டன்று. " . மன்னர் குடைகள் தம்முள் தலைமயங்கிய வாட்போரி னுள்ளே, தனது வேற்படை மாற்றாரது பொருகளிற்றின் மத்தகத்தே குளிப்ப எறிந்து, பின், படையின்றியே தன் தோள்வலியால் வெற்றி கொண்டது, ஏம எருமை ஆகும். 'படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமம் என்பர் தொல்காப்பியர் (புறத். 17), கைப்படையைப் போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கம் என்பது பொருள். பாழி-வலி, அதனைச் செலுத்திய வெற்றிக்கு ஆயிற்று. மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச் செருப்புகன்று செங்கண் மறவன்-நெருப்பிமையாக் கைக்கொண்ட எஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி மெய்க்கொண்டான் பின்னரும் மீட்டு. 140 சிவந்த கண்ணினை உடையானான மறவன், போரினை விரும்பித், தான் கைக்கொண்ட வேற்படையினைப் பகைவரது கடிய யானையின்மேல் போக்கிவிட்டு, மதர்த்த எருமைக் கடாவைப் போலச் சீறியவனாகத், தன் தோள்களே கொம்பு களாகக் கொண்டு, பின்னரும் பொறிபிறப்ப விழித்தவனாகத், தனது மெய்வலியினாலே போரிட்டு வெற்றி கொண்டான்! . . . இந்தத்துறைக்கு மேற்கோளாகநச்சினார்க்கினியர் காட்டும்,