பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புறப்பொருள் വെങ്ങാ மூலமும் ຂ-ເທງແມ໋, மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல் கையகத்துக் கொண்டான் கழல்விடலை-வெய்ய விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த - படுசுடர் எஃகம் பறித்து. - - 142 வீரக்கழலினை உடையானான இவ்வீரன், வெய்தான மிகுகனலைச் சிதறி, மணம் நாறும் தன் மார்பத்தைப் பிளந்த ஒளிதோன்றும் வேலினைப் பறித்துத், தன் கையகத்தேயும் பற்றிக் கொண்டான்;. இனிப், போரிடத்துப் பகைவேந்தரின் மாறுபாடுதாம் என்னாகுமோ? - பகைவர் அழிவரென்பது கருத்து வேலைப் பறித்த அவனும் சாவான் என்று இரங்குதலும் கொள்க. 16. முன்தேர்க் குரவை கழுவுறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர் முழுவலி வயவர் முன்னா டின்று. கணைய மரத்தைப் போன்ற, திண்மையான தோள்களை உடையதும்பைவேந்தனின் வெற்றித்தேருக்கு முன்பாக, நிரம்பிய வலிமையினை உடைய தும்பை மறவர்கள் குரவையாடுவது, முன்தேர்க் குரவை ஆகும். - வாகைத் திணைக்கண், வெற்றி பெற்ற வேந்தனின் தேர் முன்பாக இவ்வாறு நிகழுவதும் முன்தேர்க் குரவை எனப்படும்(வெண்பா.1ள) - - . . . . ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து வானார்மின் னாகி வழிநுடங்கும் - நோனாக் கழுமணிப் பைம்பூண் கழல்வெய்யோன் ஊரும் குழுமணித் திண்தேர்க் கொடி. 143 பகை பொறாதவனும், கழுவிய மணிகளானே அமைந்த அணிகலன்களைப் பூண்டவனும், வீரக் கழல் அணிந்தவனும், போர் விருப்பினை உடையோனுமாகிய தும்பை வேந்தன், ஊர்கின்ற திரண்ட மணிகளையுடைய திண்ணிய தேரின் கொடியானது, அமையாத வீரர்கள் தேர்முன் ஆடிவர, அமர்க்களத்தே, வானிடத்துப் பொருந்திய மின்னைப் போன்று முறையே ஒளியுடன் ஆடாநிற்கும். - கொடி, வயவர் శిL- வழி நுடங்கும்’ என்க. தும்பை மறவனின் தேர்செல்லுகிற மறமேம்பாடு கண்டார், கூறியது இது.