பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்வதாம். அவை இரங்கலும் ஆகிய தானைமறமும்; 128 - புறப்பொருள் வெண்பாமாலை ു உரையும் அனைவரது அழிவையும் கண்டோர் இரங்கிக் கூறுவது இது. பெண்டிர்-தேவியர். இருதிறப் படைஞரும் முற்றவும் அழிபாடுற்றதும் இதனால் விளங்கும். - தொகுத்து உரைத்தல் - மறத்தொழில் ஒன்றே கருதி, இருபெரு வேந்தர்கள் தம் தானையுடன் போரினை மேற்கொள்ளலாகியதும்பைத் திணை என்னும் ஒழுக்கமானது, இருபத்து நான்கு துறைகளாக அரசன் தன் படைமறவரைத் தலையளிசெய்து போற்றுத லாகியதும்பையரவமும் போர் செய்து இருபடையும் மடிந்து போகாமற்படிக்கு விலக்கிய உயர்பும், காலந்தாழ்க்கையைக் கூடாதென அமைச்சர் உறுதிப்பொருள் உரைத்தலும், தன் படைமேம்பாட்டைக் கூறி மாற்றார் படையினது அழிவிற்கு தும்பையானின் இளங்களிற்றது மறமாண்பு கூறுதலாகிய யானை மறமும்; அவனது குதிரையது திறத்தைக் கூறுதலாகிய குதிரை மறமும்; தூசிப்படையைத் தானே தடுப்பதாக முன்வரும் வீரரது மறமும், பகைமன்னர் பலரும் கூடித் தன் மன்னனை வளைத்தபோதுதான் ஒருவனாகவே அவரைத் தடுத்தபடிநிற்கும் வீரனது மறமும் கூறலாகிய தார் நிலையும்; வேந்தனது தேரினது நன்மையைச் சொல்லுதலாகிய தேர்மறமும்; - - பகைவரது களிற்றைக் கொன்று பட்டு வீழ்ந்தார்க்குப்பாணர் இறுதிக்கடன் செய்தலாகிய பாண்பாட்டும்; பொருதிய இருதிறப் படைகளும் அழிய, அவ் வேந்தர் இருவரும் தாமும் போரிட்டு மடிதலாகிய இருவரும்தபுநிலையும் புறமுதுகிடும்தன்படைக்குப் பின்னணியிலே சினத்தோடு ஒரு வீரன் நிற்றலாகிய எருமை மறமும்;தன்வேலினைமாற்றாரது களிற்றின்மேல் எறிந்துவிட்டுத் தோள்வலியாற் போரிடும் ஒருவனின் ஏம எருமையும்; . . . பகைவரது படைமறவரைக் கொன்று, வேல் திரித்து மறவன் ஒருவன் ஆடுதலாகிய நூழிலும்; தன் உள்ளத்தே கிழிந்த வேலைப் பறித்துப் பகைப்படை கெட்டோட எறிந்த வீரனின் செயலாகிய நூழிலாட்டும்; , , - படைஞர் வேந்தனின் தேர்க்கு முன்னாக ஆடும். முன்நேர்க்குரவையும், வீரரும் விறலியரும் தேர்க்குப் பின்னாக ஆடும் பின்தேர்க்குரவையும்; தேர்க்கு முன்னும் பின்னும் பேய்கள் கூத்தாடலாகிய பேய்க்குரவையும், களிற்றை வேலால் எறிந்து அது பட்டுவீழ அதனடியில் அகப்பட்டு உயிர்துறந்த வீரனின் செயலான களிற்றுடனிலையும்; -