பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

weuiaoanza * wiewiu.sa 129 வாளேந்திய மறவர் வேந்தனொடும் கூடி ஆடுதலாகிய ஒள்வாள் அமலையும்; இருபடையும் தன் வீரத்தைப் பாராட்ட ஒரு வீரன் களத்தே சிறத்தலாகிய தானை நிலையும்; - - அம்புகள் ஊடறுத்த உடலினனான வீரனின் உடலைத் தரைமகள் தழுவாதபடி அந்த அம்பு முனைகளைத் தாங்கி நின்றதான வ்ெருவரு நிலையும் பட்டுப் பகைபுகழக் கிடந்த வீரனை, அவன் மனைவி நெஞ்சிறுகத் தழுவுதலாகிய சிருங்கார நிலையும், வாளால் புண்பட்ட வடுவானது ஆழ்ந்திருந்த மார்பகத்தையுடைய தன் கணவனைக் கண்ட மனைவி, உவகை மீதுரக்கண்ணிர் சொரிதலாகிய உவகைக்கலுழ்ச்சியும்; தன் மன்னன் இறந்தானாக, வீரமறவன் அது பொறுக்காது, தன் உயிரையும் போக்குதலாகிய தன்னை வேட்டலும்; தன் கணவன் உடலைத் தேடியவளாக மறத்தி களம் சேறலாகிய தன்னை வேட்டலும்; இரு பெரு வேந்தரும் பிறரும் முற்றவும் அழிந்துபடுதலாகிய தொகை நிலையும் ஆம். XXXXXX