பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

usutagama - areau-e 3: நுகத்தின்கட் பகலாணியைப் போன்று நடுவுநிலையொடு விளங்கும் சொல்லினையுடைய, மாறுபாட்டாற் சிறந்த தம்வேந்தனது இயல்பினைக் கூறுவது, அரச வாகை ஆகும். ஐவகை மரபின் அரசர் பக்கம் என்பது தொல்காப்பியம் (புறத். சூ.20). அதாவது, ஓதல், வேட்டல் ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்னும் ஐவகை இலக்கணத்தையுடைய அரசன்கூறும் என்பது அதன் பொருள். . . . . - காவல் அமைந்தான் கடலுலகம் காவலால் ஒவல் அறியாதுயிர்க்குவகை-மேவருஞ்சீர் ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு வெந்திறல் தண்ணளியெம் வேந்து. - 157. பொருந்துதல் வரும் நன்மையினையுடைய ஐந்து தொழிலினையும், நான்கு மறைகளையும், மூன்று தீயினையும்,இரு பிளப்பினையும், பகையிடத்து வெவ்விய ஆற்றலினையும், பிறரிடத்து தண்ணிய அருளினையும் உடையவன் எம் மன்னன்: ' அவன், கடல்சூழ்ந்த பூமியினைக் காவல் செய்தலாகிய தொழிற்கண்ணே அமைந்தனன்; இவன் காவலினாலே பல்லுயிருக்கும் மகிழ்ச்சி ஒழிதல் அறியாது - ஐந்துதொழில்-ஒதல்,வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல்’ என்பதாம். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர், இவற்றை 'ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்பர். (புறத். சூ.20 உரை) - இருபிறப்பு, பூனூல் அணிதற்கு முன்னும் பின்னுமாகிய பிறப்புகளைக் குறித்தது. இதனால், மன்னர் பூணுரல் அணிவதென்பதும் இந்நூலாசிரியர் காலத்து வழக்காதலை அறிக. 3. முரச வாகை ஒலிகழலான் அகனகருட் - பலிபெறுமுரசின் பண்புரைத்தன்று. ஒலிக்கின்ற வீரக்கழலினை உடைய மன்னனது . . . அகற்சியமைந்த மாளிகையிடத்துப், பலியைப் பெறும் வெற்றி - முரசினது தன்மையைச் சொல்லியது, முரசவாகை ஆகும். - இதுவும் முரசினை உடையானது வெற்றி மேம்பாட்டைக் கூறுவதே ஆகும். உடையானது வெற்றி உடைமையின் மேலாகக் கொண்டு கூறப்பெற்றது. - மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து புதிய புகழ்மாலை வேய-நிதியம் * வழங்கும் தடக்கையான் வான்தோய் நகருள் முழங்கும் அதிரும் முரசு. 158