பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مر துன்பங்கள் ஏதும் வந்து இனி அடையா! 134 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பகையுள்ள காலத்தே அதிருகின்ற இயல்பினதாயிருந்த முரசமானது, திங்களையொத்த உயர்ந்த கொற்றக் குடையினை உடையவரான அரசர்கள் பலரும் பணிந்து புதிதான புகழ்மாலையினைச் சூட்ட செல்வத்தை இரவலர்க்கு வழங்கும். பெரிய கையினையுடைய நம் அரசனது, விண்ணைத் தொடுமளவு உயரத்தைக் கொண்டதான மாளிகையிடத்தே, இப்பொழுது வெற்றிமுழக்கத்தை எழுப்பியதாயிருக்கின்றது! வெற்றி முரசினை முழக்கும் ஒலிவகை பகையுள்ளபோது இடிக்குங்குரலாகவும்,வெற்றியுள்ளபோது முழக்குங் குரலாகவும் அமைவதனை அறிக வெற்றிச் செய்தியை முழக்கும் முரசது . சிறப்புக் கூறுதலான், முரச வாகை ஆயிற்று. 4. மறக்கள வழி முழவுறழ் திணிதோளானை உழவனாக உரைமலிந்தன்று. - - முழவிை னப் போலத் திரண்ட திண்ணிய தோளினை உடையானான மன்னனை உழுதொழிலையுடைய வேளாளனாக மிகுத்துச்சொல்லியது, மறக்களவழி ஆகும். - ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியும் என்னும் தொல்காப்பியச் சூத்திரப் பகுதியையும் (புறத். சூ. 21) இதனோடு ஒப்பிட்டுக் காண்க. உழவர் செயலொடு மன்னரின் போர்க்களத்துப் புகழ்விளைக்குஞ் செயலை ஒப்பிட்டுக் கூறுவது இதுவாகும். - - அஞ்சுவரு தானை அமரென்னும் நீள்வயலுள் வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேற் பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் நல்கலான் எங்கட் கடையா இடர். - - . . 159. w கண்டார்க்கு அச்சம் வரச்செய்தற்குக் காரணமாகும், தானையாகிய வரம்பினையுடைய போர்க்களம் என்னும் நெடிய வயலினுள்ளே, வெவ்விய சினம் என்னும் வித்தினை விதைத்துப் புகழாகிய பயனை விளைக்கின்ற, செம்மை சுடரும் வேலினைக் கேர்லாகக் கொண்டு, பச்சென்ற கண்ணினாலும் பணைத்த தாளினாலும் சிறந்த களிறாகிய ஏரினை நடத்தி, உழவினைச் செய்பவன் எம் மன்னன்; அவன் அளித்தலால், எங்கட்குத் நல்கல், வெற்றியை என்க. பொருள் எனக் கொண்டால், இரவலர்க்கு வழ லான் அவர்க்கு வறுமை வந்தடைய எனக் கு வழங்குத - குவறுை ந கொள்க. -