பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வாகைப்படலம் 135 5. களவேள்வி அடுதிறல் அணங்கார -- விடுதிறலான் களம்வேட்டன்று. . கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணுமாறு, . பரந்த வலியினையுடைய மன்னன், களவேள்வி வேட்டது, களவேள்வி ஆகும். - - - - - நிணக்கூழ் அட்டுக் காளிக்குப் படைத்துப் பேய்கட்கு ೭ನಃr೯ಾಕಿ தருவது இது ; : பிடித்தாடியன்ன பிறழ்பற்பேய் ஆரக் . . . . . . . கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத் தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக மூளையஞ்சோற்றை முகந்து 160 வெற்றிக் கொடியினை உயர்த்த தானையினையுடைய மன்னவன்,பலுவையொத்த பிறழ்ந்த எயிற்றினையுடைய பேய்கள் உண்ணுமாறு, மகுடத்தலையாகிய மிடாவிலே, தோளுடன் வெட்டுண்டு வீழ்ந்த தோள்வளையாற் சிறந்த கையே துடுப்பாகக் கொண்டு, மூளையாகிய அழகிய சோற்றை முகந்து வழங்கினான். பலுபிடித்தாடி என்னும் ஒருவகைக் கருவி கை நழுவாதப்டிக்குப் பிடிப்பு வலுப்பெறுவதற்கு, அதன் கண் தெற்றியபடி அமைந்திருக்கும் அமைதியுடன் கூடியது இது: பலகறை எனவும் இதனைக் கூறுவர். 6. முன்தேர்க் குரவை வென்றேந்திய விறற்படையோன் முன்றேர்க்கண் அணங்காடின்று. - தன் பகையினை வென்று எடுத்த, வெற்றியான் மிக்க படைக்கலங்களை உடைய மன்னனது தேரின் முன்னிடத்தே பேய்கள் கூத்தாடியது, முன்தேர்க்குரவை ஆகும். - தும்பைக்கண் வரும் முன்தேர்க்குரவை 143)யுடன் ஒப்பிட்டு வேறுபாட்டினை அறிக. வாகைத் திணைக்கண்ணும் அணங்காடியது என்பது இது தொல்காப்பிய உரைக்கண் (புறத். சூ2)நச்சினார்க்கியர்,தேரின்கண்வந்த அரசர் பலரையும்வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த் தட்டில் நின்று, போர்த் தலைவரொடு கைபிணைந்தாடும் குரவை’ இதுவென்பர். உலவ வளஞ்செய்தான் ஊழிவாழ் கென்று புலவாய புன்தலைப்பேயாடும்-கலவா