பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் அரசதிர நூறி அடுகளம் வேட்டான் முரசதிர வென்றதேர் முன். 161 தன்னொடும் பொருந்தாத அரசர்கள் நடுங்கும்படியாக, வெட்டிக் களவேள்வியைச் செய்து வாகை சூடினான், நம் மன்னன் வெற்றி முரசம் முழங்க அங்ங்னம் போரினை வென்ற தேரின் முன்பாகக், கெடாத நன்மையினைச் செய்தானாகிய இவன் நெடுங்காலம் வாழ்வானாக' என்று சொல்லிப், புலால் நாறும் வாயினையும் புற்கென்ற தலையினையும் உடையவான பேய்கள் நின்று கூத்தாடும்! 'உலவா வளஞ்செய்தான் எனப் பேய்கள் போற்றுவது, அவை உண்டுகளிக்கப் பகைவரைக் கொன்று குவித்த வெற்றிச் செயலினைக் குறித்தாம் உலவாகெடாத - 7. பின்தேர்க் குரவை பெய்கழலான் தேரின்யின் மொய்வளை விறலியர் வயவரோடாடின்று. இட்ட வீரக்கழலினை உடையானது தேரின் பின்னாகச், செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர் வீரரொடும் சேர்ந்து கூத்தாடியது, பின்தேர்க் குரவை ஆகும். - இதனையும், தும்பைக்கண் வரும் பின்தேர்க் குரவையோடு ஒப்பிட்டு வேறுபாடு அறிக. தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றும் ஆடுங் குரவை’ இது வென்பர் நச்சினார்க்கினியர் (புறத். சூ.21). - வஞ்சமிலாக் கோலானை வாழ்த்தி வயவரும் அஞ்சொல் விறலியரும் ஆடுபவே-வெஞ்சமரில் குன்றேர் மழகளிறும் கூந்தற் பிடியும்போல் - பின்றேர்க் குரவை பிணைந்து. 162 வெற்றியினையுடைய வீரரும், அழகிய மொழியினை உடையாரான பாணிச்சியரும், வெவ்விய போரினிடத்தே, குன்றினை நிகர்த்த இளங்களிறும் கூந்தலையுடைய இளம் பிடியினையும் போல, பொய்யாத செங்கோலை உடையவனான தம் அரசனை வாழ்த்தி, அவனது தேரின்பின்னர்க் குரவைக் கூத்தினைக் கைகோத்து ஆடும் கோப்பைக் கொண்டு, கூத்தாடா நின்றனர்! - - தும்பையின் முன்தேர்க் குரவையும் பின்தேர்க் குரவையும் போர்க்குச் செல்லுகின்ற தேரின்மேல்; இவை வென்று நின்ற தேரின்மேல். இதைக் கவனிக்க மழ-இளமை. கூந்தல்பிடியானையது கழுத்தடி மயிர். - -