பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வாகைப்படலம் 137 8. பார்ப்பன வாகை கேள்வியாற் சிறப்பெய்தியானை வேள்வியான் விறல்மிகுத்தன்று. கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை, வேள்வி யான் வெற்றியைப் பெருக்கியது; பார்ப்பனவாகை ஆகும். ஒதங் கரைதவழ்நீர் வேலி உலகினுள் வேதங்கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதம் சுடுகூடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வியகத்து. - 163 விரும்பின பரந்த அனலையுடைய யாகத்திடத்தே,திரை கரை மீதிலே தத்தும் கடலே வேலியாகவுடைய நிலவுலகினுள்ளே நான்கு வேதங்களையும் கரைகண்டானான இவன், குற்றத்தைச் சுடும் நெருப்புத் தானேயாகி, எல்லாரும் புகழ்ந்து போற்றத், தாபதர்க்கரசாய்ச் செம்மாந்து வீற்றிரா நின்றான்! ." . உலகினுள் வேதங் கரைகண்டான், வேள்வியகத்து, ஏதம் கூடுசுடர் தானாகிச் சொல்லவே வீற்றிருக்கும் என்க. ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஒம்பும் அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க நாவலம் கொண்டு நண்ணார் ஒட்டிப் பார்ப்பன வாகை சூடி, ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்.” எனவரும் சிலப்பதிகாரப் பராசரன் கதைப்பகுதியும், இதனை விளக்கும். (சிலம்பு:23; 67-73) - - 9. வாணிக வாகை செறுதொழிலிற் சேணிங்கியான் அறுதொழிலும் எடுத்துரைத்தன்று. - - பொல்லாத வினையினின்றும் விலகித் தொலைவின்கண் சென்ற வணிகனுடைய, ஆறு தொழில்நலத்தையும் உயர்த்துச் சொல்லியது, வாணிக வாகை ஆகும். உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுணர ஓதி அழல்வழிபட்டோம்பாத ஈகையான் ---- ஆதி வணிகர்க்கரசு. - 164