பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புறப்பொருள் Qຄmmurural மூலமும் உரையும் நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைபொருளைக் கைக் கொண்டும், ஆரவாரிக்கும் ஆனிரையைப் பாதுகாத்தும், குற்றமில்லாத பண்டங்களை விற்றும், கற்றற்குரியன. முற்றவும் . உணரக் கற்றும், முத்தீயினை வழிபட்டும் தன் பொருளைச் சீர்தூக்காது வழங்கும் வண்மையினை உடையான், முதன்மை வணிகர்க்கெல்லாம் அரசன் ஆவான். * - பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த, ஒரு 5ಣಗಿಹ குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி -- பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்' என வரும் சிலம்பின் - தொடர்களையும் இங்கே கருதுக-(131.33). 10. வேளாண் வாகை மேல்மூவரும் மனம்புகல வாய்மையான் வழியொழுகின்று. மேற் சொல்லிய அரசரும் பார்ப்பனரும் வணிகரும் ஆகிய மூன்று சாராரும் நெஞ்சத்தால் விரும்பும்படியாக, வாய்மையிலே வழிபட்டு நடந்துவருவது, வேளாண்வாகை ஆகும். 'இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்ற சூத்திரப் பகுதியில் (புறத் 20) வேதம் ஒழிந்தன ஒதலும், ஈதலும், உழவும், நிரையோம்பலும், வாணிகமும், வழிபாடுமாகிய ஆறு பகுதிகளையும் உடைய தொழிலினர் வேளாளர் என நச்சினார்க்கினியர் கூறுவர். இந் நூலாசிரியரோ வழிபாடு மட்டுமே இவர்க்குக் கூறுகின்றனர். இது சமூகத்து அன்றைய நிலையினைக் காட்டுவதாம். - . . மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர் ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான்-ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் - . உழுவான் உலகுக்கு உயிர். - - 165 - அந்தணர் அரசர் வணிகர் எனச் சொல்லப்பட்ட மூவரும் மனம் விரும்புமாறு ஒழுக்கத்தால் முதிர்ந்து, அவரவர் ஏவின செயலை ஏற்றுக்கொண்டு மீண்டும் மறுத்துச்சொல்லாதவனாய், நீதிநூல் ஏவிய வழியே வழுவாதவனாய், முறையே நிலைபெற்று, வண்டினம் நிறையும் கழனியுள் உழுதலைச் செய்யும் அவனே, உலகுக்கு உயிர் அனையான் ஆவான். வேளாளரைப் பற்றிய, மூவர் ஏவல் கொள்ளலாகிய கருத்து ஏற்புடையது ஆகாமை தெளிவாம். எனினும், அக்காலத்தய சமூக - நியதி இங்ங்னம் இருந்ததென்று கொள்க.