பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வாகைப்படலம் 141 14. கூதிர்ப் பாசறை கூற்றனையான் வியன்கட்டுர்க் கூதிர்வான் துளிவழங்க ஆற்றாமை நனிபெருகவும் - அயில்வேலோன் அளிதுறந்தன்று. பகைவர்க்குக் கூற்றத்தினை நிகர்த்தவனது அகன்ற பாசறையிடத்துக், கூதிர்க்காலத்து மேகமானது துளிகளை வழங்கவும், அதனாற் பிரிவாற்றாமையானது மேன்மேற் பெருகவும், கூரிய எஃகினை உடையான் கருணையைத் துறந்தது, கூதிர்ப் பாசறை ஆகும். . கூதிர் என்பது, ஐப்பசி கார்த்திகையாகிய மாதங்களைக் கொண்ட பெரும் பொழுது இக்காலத்துப் பிரிதல் வன்மையின் இது வென்றி யாயிற்று. கவலை மறுகிற் கடுங்கண் மறவர் உவலைசெய் கூரை யொடுங்கத்-துவலைசெய் கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான் மூதின் மடவாள் முயக்கு. . 169 கொடியாற் பொலிந்த தேரினை யுடையான், கவர்த்த நெறிகளிடத்தே தறுகண்மை உடையரான வீரர்கள் தழையாற் பண்ணின கூரையிடத்திலே சென்று ஒடுங்கும்படியாகச் சிறுதுளியைப் பண்ணும் கூதிர்க்காலம் வருத்தவும், பழைய மனையிடத்து மனைக்கிழத்தியின் தழுவலை நினையான் ஆயினன் * . t இதனைப் பாசறை முல்லை. . 76Tಶ காட்டுவர் நச்சினார்க்கினியர்.(புறத். சூ. 2. உரை). உள்ளுதல் இயல்பேனும், போர்வென்றிமேற்சென்ற உள்ளத்தினாலே உள்ளான் ஆயினான் என்க. . - 15. வாடைப் பாசறை வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்ப்பெய்த வந்துலாய்த் துயர்செய்யும் வாடையது மலிபுரைத்தன்று. - . வெவ்விய திறலினை உடையானது அகன்ற பாசறையிடத்தே, வேலாற் சிறந்த மறவர்கள் நடுக்கமுறும்படியாக வந்து இயங்கித் துன்பஞ் செய்கின்ற வாடைக் காற்றது மிகுதியைச் சொல்லியது, வாடைப் பாசறை ஆகும். - -