பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வாடை வருத்தவும் வென்றியே கருதியிருந்தனன் ஆதலால் 'வாடைப் பாசறை ஆயிற்று. தொல்காப்பியம், கூதிர்வேனில் என்றிரு பாசறைக் காதலினொன்றிக் கண்ணிய மரபினும் என்று கூறும் (புறத். சூ.2) இங்கு வேனிற் பாசறை கூறிற்றிலர். ஏனைய காலங்களாற் பாசறைப் பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார் என்னும் நச்சினார்க்கினியர் கருத்தையும் இங்குக் கருதுக. . வாடை நலிய வடிக்கண்ணாள் தோணசை ஒடை மழகளிற்றான் உள்ளான்கொல்-கோடல் முகையோடு அலம்வர முற்றெரிபோற் பொங்கிப் பகையொடு பாசறை யுளான். 170 பட்டத்தையுடைய இளங்களிற்றினைக் கொண்டவன். வாடைக் காற்றானது தன்னை வருத்தவும், மாவடுப் போன்ற கண்ணாளுடைய தோள்களைத் தழுவுகின்றதனை விரும்புதலை நினையான் போலும் காந்தள் முகையோட சுழலும்படிமுதிர்ந்த, நெருப்புப்போற் கோபித்துப் பகைவர்கள் கெட்டோடுதற்குக் காரணமான பாசறையிடத்து உள்ளானே! - . . வடிக்கண்ணாள் தோள்நசை உள்ளான்கொல் பகையோடப் பாசறையுளான் என, அவனது காமத்தை வென்ற போர் வெற்றி விருப்பினைச் சிறப்பித்தனர். . . ... "

. . . .

16. அரச முல்லை

செருமுனை உடற்றுஞ் செஞ்சுடர் நெடுவேல் இருநிலங் காவலன் - இயல்புரைத் தன்று. - - போர் முனையுள் பகைவரை வருத்தும், சிவந்த சோதியாற் சிறந்த நெடிய வேலினை உடையானான, பெரிய நிலவுலகைக் காக்கும் மன்னனது இயல்பினைச் சொல்லியது, அரச முல்லை ஆகும். - - o - - செயிர்க்கண் நிகழாது செங்கோல் உயரி - மயிர்க்கண் முரசம் முழங்க-உயிர்க்கெல்லாம் நாவலகலிடத்து ஞாயிறனையனாய்க் - காவலன் சேறல் கடன். 171 நாடு காக்கும் காவலன், குற்றத்திடத்துச் செல்லாதே செங்கோன்மையினை உயர்த்தி, மயிரான் மிக்க கண்ணினை யுடைய வீரமுரசம் முழங்க, நாவலந் தீவாகிய அகன்ற இடத்தின்கண் வாழுகின்ற எல்லாவுயிர்க்கும், ஞாயிற்றைப் போன்றவனாக நடத்தல் முறைமையாகும். -