பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வாகைப்படலம் 143 முல்லை, இயல்பு மிகுதி கூறுதல் என்பதனைக் கருத்திற் கொள்ளுக. - - 17. பார்ப்பன முல்லை கான்மலியும் நறுந்தெரியல் கழல்வேந்தர் இகலவிக்கும் நான்மறையோன் நலம்பெருகு நடுவுநிலையுரைத்தன்று. . செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய, வீரக்கழலாற் பொலிந்த மன்னரது மாறுபாட்டினை அவிக்கும் நான்மறையோன்,நன்மைமிக்கசெப்பநிலையினைச்சொல்லியது, பார்ப்பன முல்லை ஆகும். - - - - - ஒல்லெனி ஞாலத் துணர்வோ விழுமிதே நல்லிசை முச்செந்தீ நான்மறையோன்-செல்லவும் வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை என்றன்றி மீண்டதிலர். - 172. பகைமேற் சென்றவிடத்து அவரை வெற்றி கொண்டன்றி மீள்தலில்லாத வெற்றி வேந்தர்கள், நன்றாகிய புகழினையும் மூவகைச் செந்தீயினை ஒம்பலையும் நான்மறைக் கேள்வியையும் உடையானாகிய இவன் சந்துவேண்டிச் செல்லவும், வெவ்விய பகையென்று சென்று மீண்டனரே அல்லாமற் போர்வென்று மீண்டதென்பது இலராயினர்; இதனால் ஒல்லென ஒழிக்கும் கடலாற்குழ்ந்த இவ்வுலகத்து அறிவே சாலச்சிறந்ததாயிருந்தது. போரினை ஒழித்த அறிவனது சால்பினைக் கூறியது இது: |த்தகைய அறிவுசால் செயலை நிகழ்த்துவோர் - வுச - էՔ55/ துTது செல்வாராகிய பார்ப்பனர் எனவே, இது பார்ப்பன வாகை 18. அவைய முல்லை நவைநீங்க நடுவுகூறும் அவைமாந்தர் இயல்புரைத்தன்று. - - குற்றம் நீங்கும்படியாக, நடுவுநிலை நின்று நியாயத்தைக் கூறுகின்ற, அறங்கூறும் அவையத்துச்சான்றோரின் இயல்பினைச் சொல்லியது, அவைய முல்லை ஆகும். . . . தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித் தொடைவிடை ஊழிவை தோலாத்-தொடைவேட்டு அழிபடல் ஆற்றல் அறிமுறையேன் றெட்டின் வழிபடர்தல் வல்ல தவை. - 173 வினாவும் விடையும் முறைமையாக, வினாவினையும் அதற்குப் பெற்ற விடையினையும் பொருத்தமுற ஆராய்ந்து "سر