பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வினாவும் விடையும் முறைமையையும் என்னுமிவைகளில் தப்பாத முடிபினைச் செய்தலை விரும்பி, அழியும் அடலும் ஆற்றலும் அறிகின்ற முறையினை மேற்கொண்டு, எண்வகைப் பண்பிற்கும் ஏற்பச் செல்லவல்லது எதுவோ, அதுவே அவையாகும். எட்டின் வழிபடர்தலாவது, குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை என்னும் இவை உடையராய் விளங்குதல். இத்தகையார் அவைக்கண் முந்தியிருப்பதான வெற்றியைக் கூறுதலால், இது அவைய முல்லை ஆயிற்று. அழியும் அடலும் ஆற்றலும் அறிமுறை ஏன்று என்பது, அவற்றை அறிதற்குரிய வகைமையானே அறிந்து மேற்கொண்டு என்பதாம். 19. கணிவன் முல்லை துணிபுணருந் தொல்கேள்விக் கணிவனது புகழ்கிளந்தன்று. - முடிவாக நிச்சயித்துப் பலவும் அறியும் பழைய கேள்வி ஞானத்தினை உடையோனான, சோதிட நூல் வல்லானது கீர்த்தியைச் சொல்லியது, கணிவன் முல்லை ஆகும். - கணிவன் - காலக் கூறுபாடுகளைக் கணித்தறியும் அறிவுடையோன் கோள்நிலை கணித்துக் கூறுவோனும் ஆம். புரிவின்றியாக்கைபோல் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத்-திரிவின்றி விண்ணிவ்வுலகம் விளைக்கும் விளைவெல்லாம் - கண்ணி உரைப்பான்கணி. - 174 தப்பாதபடி, தன் உடலினைப் போலப் பேணவேண்டிய நூல்களைப்போற்றிக்கற்று.துன்பமின்றி உண்மையினை அறியத், தப்பில்லாமல் வான மண்டிலமும் இவ்வுலகமும் விளைக்கின்ற விளைவுகளை எல்லாம் கருதிச் சொல்லும் அவனே, சிறந்த கணியாவான். - - புரிவின்றிதப்பு இல்லாமல் பட்டாங்கு உண்மை. 20. மூதின் முல்லை அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று. - கொல்லும் வேலினையுடைய வீரர்க்கல்லது, அம் மறக்குடியின் மடப்பத்தையுடைய மகளிர்க்கும் சினத்தைச் சிறப்பித்தது, மூதின் முல்லை ஆகும்.