பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்


ஆனைமுகத்தான் என்பதற்கு ஏற்ப, ஊறு மதத்து' எனக் கூறினர். சிரித்துப் புரம் எரித்த சிவகுமரனின் பேராற்றல், சேனைமுகத்து ஆளிரியச் சீறும் என்பதனால் நன்கு காட்டப்பெற்றது.

நடையூறு, சொன், மடந்தை நல்குவது' எனக் கொண்டு, நடையழகிலே ஊற்றமிகுந்த சொல்வளத்தினைக் கலைமகள் தந்தருள்வாள்' என உரைப்பதும் ஒன்று. இது வழிபடு கடவுளை வாழ்த்தியது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப கண்ணுதற்
பவள மால்வரை பயந்த
கவள யானையின் கழல்பணி வோரே.

2

நெற்றிக் கண்ணினை உடையவனும், செம்பவளத்தின் ஒரு பெரிய மலையினைப்போன்று விளங்குபவனுமாக சிவபிரான் பெற்றருளிய, கவளங்கொள்ளும் யானையினது திருவடிகளைப் பணிபவர்கள், தாம் எண்ணியன அனைத்தும் எண்ணியதன் வகையே எய்துதலைப் பெறுவார்கள்.

'கழல் பணிவோரே எய்துப' என்றதனால், கழல் பணியாதவர் எய்தார் என்பதும், கழல் பணிவோர் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்றதனால், பணியாதார் எண்ணிய எண்ணியதன் மாறுபாடாக எய்துதலையும் பெறுவர்' என்பதும் பெற்றாம்.

'யானை' என்றது, யானை முகவனை, யானை என்றதற்கு இயைய, அது கவளம் கொள்ளும் இயல்பினைக் கூறுவாராகக் கவள யானை' என்றனர். கழல்-வீரக் கழல்; கழல் விளங்கும் திருவடிகளைக் குறித்தது.

தானே அருளுதற்குரிய வல்லமை உடையவன் ஆனைமுகன், எனினும், அவனது சிறப்பின் மிகுதியினை மேலும் விதந்து. கண்ணுதற் பவள மால்வரை பயந்த' என அவனைப் பெற்ற சிவபிரானின் தகுதி மேம்பாட்டினையும் கூறினார்.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

என்பது குறள். அவர் திண்ணியராக இருப்பதுடன் கவள யானையின் கழல் பணிவோராகவும் இருத்தல் வேண்டும் எனக் கூறுவது இது.