பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வாகைப் படலம் - 147 பொருந்தினபடி காவலியல்பினைப் பிறர் எடுத்து உரைப்பினும், அது காவன் முல்லைத்துறைக்கு உரித்தானதாகும். முன்னது காவலியல்பைச் சிறப்பித்துக் கூறியது; இது காவலியல்பை மன்னனுக்குச் சான்றோர் எடுத்துக் கூறியது. ஊறின் றுவகையுள் வைக உயிரோம்பி ஆறிலொன்றானா தளித்துண்டு-மாறின்றி வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும் தான்காவல் கொண்டல் தகும். 179 தனக்கு மாறுபட்டார் எவருமின்றி, வானகத்தைக் காவல் - மேற்கொண்ட தந்தையது நெறியே நிலை நின்று, நாள்தொறும், மன்னன், குற்றமின்றி உவகையுள்ளே வைகுமாறு உயிர்களைக் காத்தும், தான் கொள்ளும் கடனாகிய ஆறில் ஒன்றினை ஒழியாதே பிறர்க்குக் கொடுத்துத் தானும் உண்டும், தான் காவல்தொழிலினைச் செவ்வியதாக மேற்கொள்ளல், தகுதியுடையதாகும். - . . - 25. பேராண்முல்லை உளம்புகல மறவேந்தன் களங்கொண்ட சிறப்புரைத்தன்று. மறமாண்பினை உடையவனான, மன்னன் மனம் விரும்பும் படியாகப் போர்க்களத்தே பகைவரை வென்று களத்தைத் தனதாக்கிக் கொண்ட வெற்றிச் சிறப்பினை உரைத்தது, பேராண் முல்லை ஆகும். - இருவரும் பொருதுகளத்துப் பகைவர் அழிய, களம் இவனதாகவே சிறத்தலைச் செய்த பேராண்மை இயல்பினை உரைத்தலால், பேராண் முல்லை ஆயிற்று. ஏந்துவாள் தானை யிரிய உறைகழித்துப் போந்துவாள் மின்னும் பொருசமத்து-வேந்தர் இருங்களி யானையினமிரிந்தோடக் கருங்கழலான் கொண்டான் களம். - 18O வலிய வீரக்கழலினையுடையான்,மறவர்கள் கூட்டினின்றும் நீக்கியெடுத்துப் போந்த நிலையினானே, ஒளிமின்னும் ஒள்ளிய வாள்களைக் கொண்டிலங்கியபோர்க்களத்திலே, பகைவேந்தரது உயர்ந்த வாட்சேனை உடையும்படியும், பெரும் மதத்தினை யுடைய யானைத்திரள் கெட்டோடவுமாக வென்று, களத்தைத் தான் கைக்கொண்டான்! பொருசமம்-பொருதுகின்ற போர், அது நிகழ்ந்த களத்தைக் குறித்தது. - . .