பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u®uiè കേീട് * ഖാ 151 - குறையாத மரக்கலம் பிளக்கும் கடலிடத்து ೧೧75ಣ5 TEುಖ76 பெறுமிடத்தும், வேறுபடுமோ? (வேறுபடாது என்பது கருத்து) சங்கது தூய்தான வெண்மை, சான்றோரது மருவற்ற தூய்மைக்கு உவமை. உவாமதி.பெளர்ணமித் திங்கள். 31. கிணை நிலை தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளர்ந்தன்று. தெளிந்த கிணைப்பறையினை முழக்குமவன், மருதநிலத்திற் கழனியிடத்து, வேளாளனது நல்ல புகழினைச் சொல்லி முழக்கியது, கிணைநிலை ஆகும். - பகடுவாழ் கென்று பனிவயலுள் ஆமை அகடுபோல் அங்கண் தடாரித்-துகடுடைத்துக் குன்றுபோற் போர்விற்குரிசில் வளம்பாட இன்றுபோம் எங்கட் கிடர். 186 குளிர்ந்த கழனியுள் விளங்கும் ஆமையது வயிற்றைப் போன்ற, அழகிய கண்ணினையுடைய கிணைப்பறையினது மாசினைத் துடைத்து, ஏர் வாழ்க’ என்று வாழ்த்திக், குன்றைப் போல விளங்கும் நெற்போர்வினையுடைய உபகாரியது செல்வத்தைப்பாடஇன்று எங்களது வறுமையனைத்தும் நீங்கும். 32. பொருளொடு புகறல் வையகத்து விழைவறுத்த - மெய்யாய பொருள்நயந்தன்று. இவ்வுலகத்துப் பொருளின்மேற் செல்லுகின்ற ஆசையினை நீக்கி, மெய்யான பொருளினை அடைதலை விரும்பியது, பொருளொடு புகறல் ஆகும் புகறல்-விரும்புதல் - பொருளொடு புணர்ந்த ப்க்கத்தானும் என்னும் தொல்காப்பிய விதிக்கு (புறத். சூ. 21) உரை வகுக்கும் நச்சினார்க்கினியர், அரசருக்கு உரியவாகிய படைகுடிகூழ் அமைச்சு நட்பு முதலியனவும், புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும் என்று பொருள்கூறிப், பக்கம் என்றதனால் மெய்ப்பொருள் உணர்த்துதலும் கொள்க' என்று உரைப்பதும் காண்க ஆமினி மூப்பும் அகன்ற திளமையும் தாமினி நோயும் தலைவரும்-யாமினி மெய்யைந்து மீதூர வைகாதுமேல்வந்த ஐயைந்தும் ஆய்வ தறிவு. 187

  • .