பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 15 ുഖത്രി ിലങ്ങാ இளமையும் அகன்று போயது: இனி மூப்பும் உண்டாகும். இனி நோய் தாமும் மீதுர்ந்து வந்துவிடும். அதனால், யாம், இனி உடலைப் பற்றியவான ஐம்புல இச்சைகளும் நம்மை அடரும்படியாகத் தங்கியிராமல், தலைவந்த இருபத்தைந்தாகிய மெய்ப்பொருள்களை ஆராய்வதே அறிவுடைமை ஆகும். - மெய் ஐந்தும் மீதுர்தல்.மெய் வாய் கண் முக்குச் செவி என்னும் பொறிகளிற் பிறக்கின்ற இச்சைகள் நம்மை மேற்கொண்டு நிற்றல், ஐயைந்து-இருபத்தைந்தாகிய தத்துவப் பொருள்கள்; அவை, ஞானேந்திரியங்கள் ஐந்தும், மகாபூதங்கள் ஐந்தும், தன் மாத்திரைகள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், மனம் முதலான அந்தக்கரணம் நான்கும், சீவன் ஒன்றும் ஆகியவை. - - ‘புலமார் பொருள்கள் இருபத்தைந்துள; நிலம்நீர் தீவளி ஆகாயம்மே; மெய்வாய் கண்மூக்குச்செவி தாமே; உறுசுவை யொளியூ றோசைநாற்றம்மே; வாக்குப் பாணி பாதபாயுருபத்தம்; ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம்; உயிரெனும் ஆன்மா ஒன்றோடும் ஆம்'(மணி.27:233-239) என வரும், சாங்கியவாதியின் விளக்கம் இந்தப் பொருள் களை விளக்கியுரைப்பதனைக் காண்க. - . . . 33. அருளொடு நீங்கல் ஒலிகடல் வையகத்து . . . . நலிவுகண்டு நயப்பவிந்தன்று. முழங்கும் கடலாற் சூழப்பெற்றிருக்கும் உலகிடத்து வந்தடையும் துயரங்களைக் கண்டு, உலகப்பற்றினை ஒழிந்தவராவது, அருளொடு நீங்கல் ஆகும். - - 'அருளொடு புணர்ந்த அகற்சியானும் என்பது தொல்காப்பியம்-(புறத். சூ. 21). அருளொடு புணர்தலாவது, ஒருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தம் தனதாக வருந்துதலும், பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக் கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றி ஆயிற்று' என்பது நச்சினார்க்கினியரது விளக்கம். - இதனை யடுத்துக், காமம் நீத்த பாலினானும்’ என்று உரைக்கும் தொல்காப்பிய விதியினையும் இதனோடு ஒப்பக் கொள்ளல்வேண்டும்-(புறத். சூ. 21). எப்பொருள்களினும் பற்றற்ற