பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மன்னனது காவல் மேம்பாடு உரைத்தலாகிய அரச முல்லை; பார்ப்பனனது நலம்பெருகும் நடுவுநிலை உரைத்தலாகிய பார்ப்பன முல்லை; . அவைமாந்தர் நடுவுகூறும் இயல்பினை உரைத்தலாகிய அவைய முல்லை; கணியது புகழ்கூறலாகிய கணிவன் முல்லை; கூறலாகிய மூதின் முல்லை; ஏறுகின்ற ஆண்மைச் செவ்வியுடைய குடிச் சிறப்புக் கூறுதலாகிய ஏறாண்முல்லை; இல்லும் பதியும் இயல்புங் கூறி நல்லாண்மையைப் போற்றுதலான் வல்லாண் முல்லை; மன்னனது காவல் தொழிலது மேம்பாட்டைக் கூறலாகிய காவன் முல்லை; அரச நெறி மன்னனுக்குப் பிறர் உரைத்தலான காவன் முல்லை; மன்னன் களங்கொண்டது கூறலாகிய பேராண்முல்லை. மன்னனது கொடையினும் மனம்பற்றாது. போர்க்குத் துடிப்புடன் நிற்கும் மறவனது கொதிப்பினை உரைத்தலாகிய மறமுல்லை; மன்னனது கொற்றக் குடையது சிறப்பைக் கூறுதலாகிய குடைமுல்லை; மன்னன் கண்படுத்த இயல்பு கூறலாகிய கண்படை நிலை மறவர் செஞ்சோற்றுக் கடனாக உயிரினை நல்குவதாகிய அவிப்பலி, சான்றோர்தம் சால்பினை உரைத்தலாகிய சால்புமுல்லை; . . . - - உழவனைக் கிணைவன் போற்றியதாகிய கிணை நிலை; மெய்ப்பொருள் விரும்பலாகிய பொருளொடு புகறல்; அனைத்துயிர்க்கும் அருளோடு உலகப்பற்று நீங்குதலாகிய அருளொடு நீங்கல் என்னும் இவைகளாம். ಛಿಛಿಛಿ.