பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgië Gafisë : un-reinu-sib 155 9. பாடாண் படலம் (பாடாண் படலம் என்னும் இந்தப் பகுதியினைப் பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாறுகளைப் பற்றிக் கூறுவதென்று கொள்ளல் வேண்டும். இதனைக் கைக்கிள்ை என்னும் அகத்திணைக்குப் புறனாக அமைவது என்பர் தொல்காப்பியர்) - - வெட்சி முதலாக வாகை ஈறாகச் சொல்லப்பட்ட எட்டுப் படலங்களினும், ஒருவரை ஒருவர் புகழ்வதென்பது, புகழ்வார் புகழப்பட்டாரது தகுதியும் செயலும் கருதிப் புகழ்வதேயன்றித், தமக்கொரு பரிசிலை மனங்கொண்டுபாடுவது ஆகாது.ஆனால், - ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்டுகின்றான்; ஒரு புலவன் பொருளும் பிறவுமாகிய பரிசிலை வேண்டுகின்றான். இவை தம்மின் வேறாகிய இச்சைகளை உடைமை வெளிப்படை இதனாற்றான் இத்திணையைக் கைக்கிளையின் புறன் என்றனர். பரிசில் நாட்டமின்றிப் புகழ் மேம்பாட்டைப் பாடுதலை விரும்பிமட்டுமே புலவர்கள் பாடினராயின், அது கைக்கிளைப் புறனாகக் கொள்ளப்படுவது அன்று என்பதனையும், நாம் இவ்விடத்தே அறிதல் வேண்டும். - - - 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே. நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே' என்பர் தொல்காப்பியர்-(புறத். சூ. 25), பாடாண் திணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும் (வெட்சிகரந்தை), வஞ்சியும், உழிஞையும்(நொச்சியும் இதனுட்படும்) தும்பையும் வாகையும், காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம் என்பது இதன் பொருள். இவை பாடாண் பொருளாகுமாறு காட்டும்போது, எல்லாத் திணையும் ஒத்ததாயினும், அவை பெரும்பான்மையும் சிறுபான்மையுமாகி வருதலும், அவை இரண்டும் பலவும் ஒருங்கு வருதலும், பாடாண் திணைக்கு மேற்கூறும் பொருளும் விராய் வருதலும் ஆம் என்பர் நச்சினார்க்கினியர். இந் நூலாசிரியரோ, இத்திணைக்குத் துறைப்பாட்டுகளாக நாற்பத்தேழினைக் கூறுகின்றனர். இவை பலவும் பாடாண் திணைக்கு ஒதுகின்றபொருட்பகுதிபலவுங்கூட்டிஒன்றும் எனச் சொல்லப்பட்டதனுள் அடங்குவனவாம். இவற்றது.நுட்பங்களை எல்லாம் வருமிடங்களுள் பின்னர்க் கண்டு தெளிவுறுக