பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_கடவுள் ಅåಣ 3 சிவபிரான் - கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்ப் பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென் . கையொத்து நேர்கூப்பு க. 3 "எள்ளினுள் விளங்கும் எண்ணெயினைப் போன்று அனைத்தினும் இரண்டறக் கலந்துநிற்பவனாகிய முதல்வனும்,நீல கண்டத்தை உடையவனும் ஆகிய சிவபெருமானையே என் கண்கள் காண்பனவாக! என் காதுகள் அவன் திருப்பெயர்களையே கேட்பனவாக என் வாயிடத்தே தோன்றும் பண்ணெல்லாம் அவனைப் போற்றுதலின் பொருட்டாகவே சொற்பதங்களைப் புனைந்து விளங்குவனவாக என் கைகளும் என் உள்ளத்தோடு ஒருமை கொண்டவையாகி, அவன் திருமுன்பிலேயே குவிந்து வணங்கியிருப்பனவாக!” அனைத்திலும் கலந்துநிற்கும் இறையின் ஆற்றலைக் கூறுவார்.'உண்ணிறைந்த நெய்யொத்து நின்றான்’ என்றனர்.பிறர் துன்புற்றவிடத்துத தான் அதனையேற்று அவரைக் காக்கின்ற பெருங்கருணைப் பெருமான் அவன் என்பதனைக் குறிக்கவே, ஆலகாலத்தை உண்டு கழுத்திடத்தே அடக்கிய அந்தப் பெருஞ்செயலை நினைந்தவராக, நீலமிடற்றன் என்றனர். கலைமகள் தவளத் தாமரைத் தாதார் கோயில் . அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே. 4 அருமை மிகுந்த தமிழ் நூலாகிய இது இனிதாக நிறைவெய்துதலைக் குறிக்கொண்டு, வெண் தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்து விளங்குகின்ற கோயிலிடத்தே கோயில் கொண்டிருப்பவளான, கலைமகளை நாம் போற்றுவோமாக!” கலைமகளின் இருக்கை வெண்டாமரை ஆதலின், அதனைத் தவளத் தாமரைத் தாதார் கோயில் எனக் கூறினர். - அருந்தமிழ்' என்றது. இந்நூலினை, வாணியாகிய அவளது அருளினையும் வேண்டுகின்றனர். வாணியின் அருளிருப்பின், வாக்குநலம் பெருகும் என்பது கருத்து.