பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவியக் கேசிகன் : un-new uLevih - 161 இன்னின்னார் இன்னின்னவைகளை எமக்குக் கொடுத்தார்கள்; நீயும் அத் தன்மையார்போல அத்தகைய பொருளை எமக்குத் தருவாயாக’ என்று, எத்தன்மையோரும் 'அறிய உயர்த்துச்சொல்லியது. இயன்மொழி ஆகும். அடுத்தூர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்து என்பர் தொல்காப்பியர். (புறத். சூ.35) தலைவன் எதிர்சென்று ஏறி, அவன் செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும் அவன் மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்து' எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை இரவாமல் ஈத்த இறைவன்போல் நீயும் கரவாமல் ஈகை கடன். 194 முல்லைக்குப் பொற்றேரினையும், மயிலுக்கு அழகிய நீலப் - போர்வையினையும், எல்லை கடலாகவுடைய உலகத்தே தம்புகழ் விளங்குமாறு, முற்காலத்தே, அவை இரவாத போதும் கொடுத்த வள்ளல்களைப் போல, நீயும் கரவு ஏதுமின்றிக் கொடுத்தலே நினக்குக் கடமையாகும். - - இறைவர் என்றது.பாரி, பேகன் என்பாரை, - 6.இயன்மொழி வாழ்த்து-2 மயலறு கீர்த்தி மான்றேர் மன்னவன் இயல்பே மொழியினும் அத்துறையாகும். மயக்கமற்ற மிக்க புகழினையும், குதிரையாற் பூட்டப்பெற்ற தேரினையும் உடைய மன்னவனது இயல்பினையே எடுத்துச்சொன்னாலும், இயன்மொழி வாழ்த்துத் துறையாகும். மான்-குதிரை. ಊTrGi- குதிரை பூட்டிய பொற்றேர். ஒள்வாள் அமருள் உயிரோம்பான் தானியக் கொள்வார் நடுவண் கொடையோம்பான்-வெள்வாள் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலாண் ஒழியாமே ஒம்பும் உலகு. 195 தெளிந்த வாளினை உறையினின்றும் வாங்காமலேயே பகைமன்னரது சினத்தினைக் கைவிடச் செய்யும் வேலினை. உடையவன் இம் மன்னன். இவன், ஒள்ளிய வாட்போரினிடத்தே உயிரைப் பாதுகாப்பது இவன். தான் கொடுக்கக் கொள்வாரான இரவலரின் நடுவிலே கொடுத்தலைக் கைவிடான்! மேலும், இவ்வுலகினை அறநெறி தப்பாமே காத்தலையும் செய்வான்