பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 10. மங்கல நிலை-2 மன்னிய சிறப்பின் மங்கல மரபில் துன்னினன் என்றலும் அத்துறை யாகும். நின்று நிலைபெற்ற சிறப்பினையுடைய மங்கலமானவற்றை எம் மன்னன் முறைமையினாலே மேவினான் என்று கூறுதலும், மங்கலநிலையே ஆகும். தீண்டியுங் கண்டும் பயிற்றியும் தன்செவியால் வேண்டியும் கங்குல் விடியலும்-ஈண்டிய மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த மன். 199 மறமாண்பினை உடைய பகைமன்னரது வெவ்விய போர்க் களத்தினிடத்தே, அவரை வென்று, தன் வேலினை உயர்த்து நின்ற எம் மன்னன், இரவு புலர்ந்ததாகத், தீண்டக் கடவன தீண்டியும், காணக் கடவன கண்டும், சொல்லக் கடவன சொல்லியும், தன் செவியாற் கேட்கக் கடவன கேட்டும். மங்கலமானவற்றை நுகர்ந்தான். . . - அரசன், பொழுது புலர்ந்ததும், முதற்கண், மங்கல மானவற்றை முறைமையொடுங் கூடி நுகர்ந்தான் என்பது இது. 11. விளக்கு நிலை-1 . அளப்பருங் கடற்றானையான் விளக்குநிலை விரித்துரைத்தன்று. அளத்தற்கு அரிய கடலினைப் போன்று பரந்த தானையினை உடைய மன்னனின், திருவிளக்கு நிலையினை விரித்துச் சொல்லியது, விளக்கு நிலை ஆகும். வேலின் ஒக்கிய விளக்கு நிலையும்’ என இதனைத் தொல்காப்பியம் கூறும்-(புறத். சூ. 35). மேலும் வேற்றலையும் விலங்காது ஓங்கியவாறு போலக், கோலொடு விளக்கம் ஒன்றுபட்டு ஓங்குவித்த நிலை இது. கார்த்திகை தீபத்தைப் போலக் கீழும் மேலும் வலமும் இடமும் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்துவிட்டு எழுந்ததென்று, அறிவோர் ஆக்கம்பற்றிக் கூறப்படும் விளக்கமும் இது. அன்றி, நித்தலும் இடுகின்ற நிலைவிளக்கு எனவும் கருதலாம். வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி ஒளிசிறந்தோங்கி வரலால்-அளிசிறந்து நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு. 2OO