பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hooggië Gaëled: " uni-rein ul-ob 165 அளித்தற் பண்பிலே சிறந்து, நன்னெறியினையே உலகிற்குக் காட்டவல்ல நலத்தின்ை ஆராயும் செங்கோன்மை உடையானுக்குக் காற்று எறிந்த விடத்தும், வலமாகச் சுழன்று எழுந்து ஒளிமிகுந்து உயர்ந்து வருவதனால், விளக்கும் வெல்லும் முறைமையினையே காட்டா நிற்கும். . காற்றெறிந்த போதும் அதனால் அவிந்துவிடாது, வலஞ்சுழன்று, பொங்கி ஒளிசிறந்து ஓங்கி வரும் விளக்கைப் போலவே, மன்னனும் பகை வருமிடத்து வெற்றிவீரனாகிச் சிறப்புப் பெறுவான் என்பது கருத்து. . 12. விளக்கு நிலை-2 அடரவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச் சுடரொடு பொருவினும் அத்துறையாகும். பொற்றகட்டாற் சிறந்து விளங்கும் பூணினையுடைய மன்னனை, ஞாயிற்று மண்டிலத்தோடு உவமிப்பினும், முற்கூறிய விளக்குநிலைத் துறையேயாகும். அடர்-தகடு. சுடர்-ஞாயிறு. வெய்யோன் கதிர்விரிய விண்மேல் ஒளியெல்லாம் மையாந் தொடுங்கி மறைந்தாங்கு-வையகத்துக் கூத்தவையேத்துங் கொடித்தேரான் கூடியபின் வேத்தவையுள் மையாக்கும் வேந்து. 201 உலகிடத்துள்ள கூத்தரது திரளெல்லாம் புகழுகின்ற கொடித் தேரினை உடையான் இவ்வேந்தன். அவன், அரசர்கள் கூடியிருக்கும் அவையினிடத்தே வந்தணைந்த பின்பு, கதிரவனின் ஒளிக்கதிர்கள் பரவா நிற்ப,விண்ணிடத்து ஒளிகொண்டனவான பிறவெல்லாம் புற்கென்று ஒடுங்கி மறைந்து போயினாற்போலப், பிறவேந்தர்கள் எல்லாரும் ஒளிகுன்றிப் போவர். . . வேந்தனைப் பேரொளி விளக்கான கதிராகவும், பிறரைச் சிற்றொளி விளக்குகளாகவும், உவமித்த, விளக்கு நிலை இது. 13. கபிலை கண்ணிய புண்ணிய நிலை அண்ணல் நான்மறை அந்தணாளர்க்குக் கண்ணிய கபிலை நிலையுரைத்தன்று. . . தலைமையிற் சிறந்த நான்மறைகளையும் கேட்டறிந்த அந்தணாளர்களுக்குக் கொடுக்கக் கருதிய பசுவினது தன்மையைக் கூறியது, கபிலை கண்ணிய புண்ணிய நிலை ஆகும். கபிலை கண்ணிய வேள்வி நிலை என்பர் தொல்காப்பியர். (புறத்.கு. 35). இதுவரையா ஈகையுட் படுவதன்று; அரசன்