பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் k பாடாண் படலம் 167 சூழ்கதிர் வான்விளக்கும் வெள்ளி சுடர்விரியத் தாழ்புயல் வெள்ளந் தருமரோ-சூழ்புரவித் தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்கு வேலோய்நின் மார்பிற்றார் கோலி மழை. 204 தெரிந்த குதிரைகளாற் பூட்டப்பெற்ற தேரின்மேல் வில்லையுடைய பகைவரது தூசிப் படையைத் தடுத்து, வெற்றியான் மிக்கவிளங்கும் வேலினை உடையோய்! ஞாயிறு முதலாயின இயங்கும் வானத்தை விளங்கப் பண்ணா நிற்கும் வெள்ளியானது, தனது சுடரினைப் பரப்பியதாக, அதனாற் கால்வீழ்த்தமேகம்,நின்மார்பிடத்துமாலைபோன்றுநீர்த்தாரை கோலி, மழை வெள்ளத்தைத் தரும். - வெள்ளி சுடர்விரியத் தாழ்புயல் வெள்ளந் தருவது நின்னுடைய காவல் சிறப்பினாலேயே’ எனப் பாடியது இது. - 16. நாடு வாழ்த்து தாட்டாழ் தடக்கையான் நாட்டது வளமுரைத்தன்று. முழந்தாளின் கீழேயும் நீண்டு தாழ்ந்திருக்கும், பெரிய கையினையுடைய மன்னனின் நாட்டது வளத்தினை உரைத்தது, நாடு வாழ்த்து ஆகும். தாட்டாழ் தடக்கை உறுப்பிலக்கணத்துட் சிறந்தோனது - எண்ணின் இடரெட்டும் இன்றி வயற்செந்நெற் கண்ணின் மலரக் கருநீலம்-விண்ணின் வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வேல் நகைத்தாரான் தான்விரும்பு நாடு. - 2O5 வெற்றி வ்ேலினையும் மலர்ந்த மாலையினையும் உடையான் தான் விரும்பாநின்ற இந் நாடானது, எண்ணுமிடத்து, எட்டு இடர்களும் இல்லாமல், வயல்களிலுள்ள செந்நெற் பயிரினுடே நீலோற்பலம் கண்ணைப்போல மலராநிற்பத்,தேவலோகத்தினது தன்மைத் தாய், வளனொடு தங்கா நின்றது! பயிருக்கு வந்துறும் எட்டு இடர்கள், விட்டில், கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும் பெயல் காற்று ஆகியன காரணமாக வருவன். இவை இன்றி வளனொடு விளங்குவது, அரசனின் காவலது சால்பினாலே என்பது கருத்து.