பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 17 ിഞങ്ങ நிலை திருக் கிளரும் அகன் கோயில் அரிக் கிணைவன் வளமுரைத்தன்று. செல்வம் பெருகும் அகன்ற அரண்மனையிடத்தே, அழகிய கிணைகொட்டும் அவனது நன்மையைச் சொல்லியது, கிணை நிலை ஆகும். - வாகைக் கிணைநிலை (வெண்பா-186) வயலுழவனைக் குறிப்பது இது, அரசனைக் குறித்தது. வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை அள்ளகட் டன்ன அரிக்கிணை-வள்ளியோன் முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன் - என்கடை நீங்கிற்றிடர். 2O6 வள்ளன்மை உடையாளின் வாயிலின் முன்னாக, வெள்ளி எழுந்த விடியல் வேளையிலே சென்று நின்று, வயலாமையது செறிந்த வயிற்றினையொத்த அழகிய கிணையினைத் தட்டி, நின் யானை வாழ்க என்று சொல்லுவதன் முன்பாகவே, வறுமைத் துயரம் என்னிடத்தே நின்றும் நீங்கிற்று. அள் அகடு-செறிந்த வயிறு வருவோனது குறிப்பறிந்து அவன் இரந்து கேட்பதன் முன்னாகவே வழங்குபவன் மன்னன்’ என்பதும் தோன்ற வைத்தனர். கிணைநிலை-கிணை கொட்டுமவனது நிலைமை. - -

  • 18. களவழி வாழ்த்து

செங்களத்துச்செழுஞ்செல்வம் வெண்டுறையாழ்ப் பாணர்விளம்பின்று. வெண்டுறைப் பாட்டிலே வல்ல, யாழிசைக்கும் பாணர், சிவந்த போர்க்களத்திடத்தே ஒரு மன்னன் பெற்ற வளவிய செல்வத்தைச் சொல்லிப் பாடியது. களவழி வாழ்த்து ஆகும். வெண்டுறை-இசைப்பா வகையுள் ஒன்று. ஈண்டி எருவை இறகுளரும் வெங்களத்து வேண்டியாம் கொண்ட விறல்வேழம்-வேண்டாள் வளைகள் வயிரியம்பும் வாள்தானை வேந்தே விளைகள் பகர்வாள் விலை. 2O7 சங்குகளும் கொம்புகளும் முழங்கா நின்ற, வாள் வீரரைக் கொண்ட தானையினையுடைய வேந்தே! முதிர்ந்த கள்ளினை விற்குமவள், அதற்கு விலையாக, பருந்துகள் திரண்டிருந்து தம் இறகுகளைக் கோதாநின்ற வெவ்விய போர்க்களத்தே, விரும்பி யாம் நின்னிடம் பெற்றுக்கொண்ட, வெற்றிவாரணத்தினை விரும்பாள்