பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் என்பதன் உரையில், குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமையின் இதனின் வேறாயிற்று' என நச்சினார்க்கினியர் உரைப்பதனையும் இங்கு நினைக்க - பூந்தாமரையிற் பொடித்துப் புகல்விசும்பின் வேந்தனை வென்றான் விறல்முருகன்-ஏந்தும் நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக் . குடுமி களைந்தான்எங் கோ. 209 . வெற்றியினையுடைய குமரவேள், சரவணப் பொய்கையில், பொலிவினையுடைய தாமரைப் பூவிலே தோன்றினான். வெற்றியாற் சிறந்த வானகவேந்தனை, அந்நாளிலேயே அவன் வென்றான். எங்கோமானாகிய இவனே, அழகேந்தும் உயரிய பகைவரது அரணைக் கைப்பற்றி, அதன் பின்னரே, உலகோர் வாழ்த்தத் தன் குடுமியைக் களைந்தான். . குடுமி களைந்தான் என்பதற்கு, வெண்பாவின் அமைதி, குடுமி களைதல் ஆகிய சடங்கு நிகழ்தற்கு முற்பட்ட சிறு பருவத்தேயே பகைவரை வென்று, அவர் அரணினைக் கொண்டான் என்ற பொருளையே தரும். . . 21. மணமங்கலம் இகலடு தோள் எறிவேல் மன்னன் மகளிரொடு மணந்த மங்கலம் கூறியது. r பகையைக் கொல்லும் தோளாற்றலையும், எறிதற்குரிய வெற்றி வேலினையும் கைக்கொண்ட மன்னன், மகளிரொடு மணம்புணர்ந்த, அந்த நன்மையைச் சொல்லியது, மணமங்கலம் ஆகும். . . அணக்கருந்தானையான் அல்லியந்தார் தோயந்தோள் மணக்கோல மங்கலம்யாம் பாட-வணக்கருஞ்சீர் - ஆரெயின் மன்னன் மடமகள் அம்பணைத்தோள் கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி. 210 பிறரானே வணக்குதற்கு அரிய மதிப்பினையும், கைக்கொள்ளற்கு அரிய அரணிடத்தையும் உடைய மன்னனது மடமகள், அழகிய மூங்கிலைப் போன்ற தோள்களையும், கூரிய பற்களையும், சிவந்த வாயிதழ்களையும் பெற்ற காமவல்லிக்கொடி போன்றவள்.அவளே, யாம் திருமணக்கோலத்தினைப் போற்றிப் பாடப், பகைவரான் வருத்துதற்கரிய தானையினையுடைய எம் மன்னனின் அழகிய அல்லிமலர் மாலையினைத் தழுவியவள் ஆவாள். . .