பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வண்டினம் ஆரவாரிக்கும் தாரினையும், வெவ்விய மாறுபாட்டினையுமுடைய வேந்தரும், இந்நாளில், நம் மன்னன் படையினை ஏவமாட்டான் என்று தெரிந்து, வெள்ளிய வளையணிந்தோரான மகளிரின் தோள்நலத்தைப் பெறுதலை விரும்பியவராகத் தம் அரணங்களின் கதவுத் தாள்களைத் தாமே நீக்குவார்கள். அங்ங்னமாக, வலிய யானையும் சிவந்த பொன்னும் பிறந்தநாளில் பரிசிலாகப் பெற்ற இரவலர் முதலாயினார், தாம் விருப்புற்று மகிழ்தல்தான் வியப்பாகுமோ? - - வெள்ளணி நாளிலே, மன்னன் செருவொழிந்து செற்றம் தவிர்ந்திருக்கும் இயல்பினைக் கூறினார். பகைவரே அச்சம் நீங்கி இன்ப நாட்டத்திலே ஈடுபடும்போது, இரவலர் மகிழ்தல் ஒரு வியப்போ என்பது கருத்து. - - . . 24. பரிசில் நிலை புரவலன் மகிழ்துங்க இரவலன் கடைக்கூடின்று. வள்ளலாகிய மன்னவன், மகிழ்ச்சியினாலே அசைய, @T೧೯ುಣಿ, தன்னுர்க்குப்போவானாக ஒருப்பட்டது, பரிசில் நிலை ஆகும். 'பரிசில் கடைஇய நிலையும்’ என்ற தொல்காப்பிய விதியையும் (புறத் சூ 36) அதற்கு நச்சினார்க்கினியர் உரைக்கும், 'பரிசிலரை நீக்குதல் அமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவனுக்குப் பரிசில் வேட்டோன், தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித், தான் குறித்த பொருண்மையினைச் செலுத்திக் கடாவின நிலையும் என்ற பொருளையும் இதனுடன் கருதுக. வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர் - நல்கிய பின்னும் நனிநீடப்-பல்போர் விலங்கும் கடற்றானை வேற்றார் முனைபோலக் . கலங்கும் அளித்தென் கடும்பு. 213 பகையை வெல்லும் குதிரைகள் பூட்டிய, விளங்கும் மணியினையுடைய திண்ணிய பொற்றேரினைப் பரிசிலாகக் கொடுத்த பின்பும், விடைதருதற்குக் காலந்தாழ்த்தலாவே, என்னுடைய சுற்றம், பலபோர்களையும் விலக்கும் கடல் போன்ற தானையினையுடைய பகைவரது நாட்டினைப்போலக் கலங்கா நிற்கும்; ஆதலால், அஃது அளிக்கத்தக்கது, பெருமானே! 'சுற்றம் அருளுதற்கு உரியது' என்றதனால், விடைநல்க வேண்டியதுமாயிற்று. கடும்பு-சுற்றம்.