பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தெருவில் அலமரும் தெண்கண் தடாரிப் பொருவில் பொருநநீ செல்லின்-செருவில் அடுந்தடக்கை நோன்றாள் அமர்வெய்யோன் ஈயும் நெடுந்தடக்கை யானை நிரை. 218 தெருக்கள் தோறும் சுழன்று திரியும், தெளிந்த கண்ணால் மலிந்த தடாரிப் பறையினையுடைய ஒப்பற்ற பாணனே! பூசலிடத்துப் பகைவரைக் கொல்லும் பெரிய கையினையும்,வலிய தாளினையுமுடைய, போரினை விரும்புவோனான தலைவன், நீ அவன்பாற் செல்வையானால், உயர்ந்த பெரிய கையினையுடைய களிற்றின் நிரையையே நினக்குப் பரிசிலாக வழங்குவான். இத்துறைக்குநல்ல உதாரணமாக விளங்குவது,"சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்’ என்னும் புறப்பாட்டு ஆகும்-(புறம். 394) . . . - 30. விறலியாற்றுப்படை திறல்வேந்தன் புகழ்பாடும் - விறலியை ஆற்றுப்படுத்தன்று. - - வெற்றியை யுடைய மன்னனது புகழினைப் பாடுகின்ற விறலியை வழிப்படுத்தது, விறலியாற்றுப்படை ஆகும். சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான் பல்புகழ் பாடிப் படர்தியேல்-நல்லவையோர் ஏத்த இழையணிந்தின்னே வருதியாற் பூத்த கொடிபோற் பொலிந்து. - 219 சில வளைகளானேசிறந்த கையினையும், சிவந்த வாயினையும் உடையவளான விறலியே! போரிடத்துச் சிறந்த படையினை உடையான்கண், அவனுடைய பலவாகிய புகழ்களையும் பாடிச் சென்றனையானால், நல்ல அவையிடத்தே உள்ளவர்கள் புகழ, ஆபரணத்தைப் பூண்டு, மலர்ந்த பூங்கொடிபோலப்பொலிவுற்று, இப்பொழுதே நீயும் திரும்பி வருவாய்! - அணிபல தருவான்’ என விறலியை ஊக்கி வழிப்படுத்தியஆl இது விறல்பட ஆடுவாளை விறலி என்பர் சான்றோர். - 31. வாயுறை வாழ்த்து பிற்பயக்கும் எம்சொல்லென முற்படர்ந்த மொழிமிகுத்தன்று. 'எம் சொல் பின்னே பலிக்கும் என்று சொல்லி, மேம்பட்ட தம் மொழியினை மிகுத்துச் சொல்லியது, வாயுறை வாழ்த்து ஆகும்.