பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ... t . புலியூர்க் கேசிகன் k பாடாண் படலம் - 179 பகைவரானே கலக்குதற்கு அரியதான கடல்போற் பரந்த சேனையினையும், வலிய களிறுகளையும் உடையவனான தம் மன்னனது, கொற்றவாளினைப் புகழ்ந்தது, வாள்மங்கலம் ஆகும். 'மாணார்ச் சுட்டிய வாண்மங்கலம் என்பது தொல்காப்பியம்-(புறத். சூ.36).வாள் மண்ணுநிலை வெண்பா (121) வேறு; இது வேறு. அது வாளினை உழிஞையார் மங்கல நீராட்டுதல்; இது, பிறர் போற்றுதல். கொங்கவிழ் ஐம்பான் மடவார் வியன்கோயில் மங்கலங் கூற மறங்கனலும்-செங்கோல் நிலந்தரிய செல்லும் நிரைதண்தார்ச் சேரன் வலந்தரிய வேந்திய வாள். - 223 நீதியினை நிலத்திற்குத் தருவான் வேண்டிநடக்கும்.நிரைத்த குளிர்ந்த மாலையினை உடையான் சேரன். அவன் வெற்றியினை வேண்டி உயர்த்த வாளானது, தேன் மலரும் சுருள்குரல் அளகத்தை யுடையவரான மடவார், அகன்ற மாளிகையிடத்தே மங்கல மொழிகளைக் கூறவும், தான் சினத்தைக் கனலா நிற்கும் "மாணார்ச் சுட்டிய' என்னும் விதியினைக் கருத, இது 'புகழ்ச்சிக்கண் பகைவரை இகழ்ந்து மன்னனது வாளாண் மையைச் சிறப்பித்தலாகவே பொருள்படும். இதனாற்றான், மடவார் மங்கலங் கூற, வாள் மறங்கனலும் என்றனர். கனலல், அப் பகைவராகிய மாணாரை ஒழித்தற்கு - 35. மண்ணு மங்கலம் எண்ணருஞ் சீர்த்தி இறைவன் எய்தி மண்ணும் மங்கல மலிவுரைத் தன்று. எண்ணி அறிவதற்கும் அரிய புகழினையுடைய அரசன் பொன்முடி புனைந்த ஆண்டு நிறைவினைப் பொருந்தித் திருமுழுக்காடுகின்ற மங்கலத்தினது மிகுதியைச் சொல்லியது, மண்ணுமங்கலம் ஆகும். 'அரசற்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் - முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலம் இது எனச் சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்’-(புறத். சூ. 36) என்பதன் உரைக்கண் நச்சினார்க்கினியர் உரைப்பர். குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணுமங்கலம் என்று. கொள்க. யாண்டு இத்துறைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் இதனாற் பெறுதும்.