பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள் மங்கலங் கூற மலிபெய்திக்-கங்கையாள் பூம்புனல் ஆகம் கெழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியல்எம் வேந்து. - 224 போரினை வெல்லுகின்ற தோளாற்றலையும், வேப்பமலர் மாலையினையும் உடையோனான எம் வேந்தன், தாதுவிரியும் மாலையாற் பொலிவுற்ற கன்னியாளாகிய மடப்பத்தையுடைய நல்லாள் தனது மங்கலத்தைச் சொல்ல, அதனாற் சிறப்பெய்தி, கங்கை என்னும் பெயருடையாளது பொலிந்த நீராகிய மார்பத்தையும் அணைந்தான்! பாண்டியனது வடபுல வெற்றியைச் சிறப்பித்துக் கூறுகின்ற சிறப்பினை ஒர்க, குமரியையும் கங்கையையும் பெண்களாக உவமித்து, அவர்களின் நாயகனாகப் பாண்டியனைப் புனைந்து கூறினர். உழிஞையுள் வரும், மன்னெயில் அழித்த மண்ணுமங்கலத்திற்கும் இதற்கும் வேறுபாட்டினைக் கருதி அறிக. (வெண்பா.122). - 36. ஓம்படை இன்னது செய்தல் இயல்பென இறைவன் முன்னின்றறிவன் மொழிதொடர்ந்தன்று. புலமை மிக்கவன், அரசனின் முன்னாக நின்று, இன்ன - தொன்றினைச் செய்தல் இயல்புடைத்து' என அடுத்துச் சொல்லியது, ஒம்படை ஆகும். ஒம்படையாவது, ஒப்பித்தல்.இன்னது செய்தல் இயல்பு என அடுத்தடுத்து உரைத்து, நன்மைக்கண் ஒப்பித்தலால், ஒம்படை ஆயிற்று. -- - ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வேல்வேந்தே-சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென்றாறகற்றி ஏழ்கடிந்தின்புற்றிரு. - 225 ஒன்றாகிய உண்மை ஞானத்தினாலே இரண்டாகிய நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து, பகை, நட்பு, நொதுமல் என்னும் மூன்றினையும் உட்கொண்டு, யானை, தேர், புரவி, காலாள் என்னும் நால்வகைப் படையினாலே பூசலை வென்று, போர்க்களத்தைக் கைக்கொண்ட வேல்வேந்தனே! கரைமேற் சென்று தவழும் அலைகளையுடைய ஆழ்ந்த கடலாற் சூழ்ந்திருக்கப்பட்ட இந்த உலகினுள்ளே, ஐம்புலன்களையும் வென்று, அரசனுக்குரிய ஆறு உறுப்புகளையும் பெருக்கி,