பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uါui4 Gဒါဧခါး၊ # பாடாண் படலம் - 181 - ஏழுவகைக் குற்றங்களையும் கடிந்து, நெடுங்காலம் வாழ்ந்திருப்பாயாக! -". - பெருக்குதற்குரியன ஆறு படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனத் திருக்குறள் உரைக்கும் (குறள்.381). இதனை, நாடிய நட்பு, பகை, செலவு, நல்லிருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல்' ஆறு எனவும் கூறுவர். கடிதற்குரியன ஏழு ஈடிலா வேட்டம், கடுஞ்சொல், மிகுதண்டம், சூது, பொருளிட்டம், கள், காமம் என்பன. ஒன்றுஆன்மா இரண்டு புண்ணிய பாவம், மூன்று:காமம், வெகுளிமயக்கம்; நான்கு-சாம, பேத தான, தண்டம் ஐந்து-சுவை ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்றும் ஆம். 'தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய ஒம்படை என்று இதனைத் தொல்காப்பியம் கூறும்-(புறத்சூ.36). 37. புறநிலை வாழ்த்து வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப வழிவழி சிறக்கென வாய்மொழிந்தன்று. - நீ வழிபடுகின்ற தெய்வம் நின்னைப் பாதுகாவா நிற்ப, நின் வழிவழி மிகுவதாக எனச் சொல்லி வாய்மொழி கூறியது, .. புறநிலை வாழ்த்து ஆகும். - - ஆவயின் வருஉம் புறநிலை வாழ்த்தும் என்னும் தொல்காப்பிய விதியையும்(புறத்.கு.35).அதற்குத் தெய்வவழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக, வாழ்த்தும் வாழ்த்தும் என வரும் நச்சினார்க்கினியர் உரையினையும் இங்குக் கருதுக. வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே. - (செய்யுளியல்.10) என்னும் தொல்காப்பிய விதியையும் அறிக தெய்வத்தைப் படர்க்கையாகப் புறநிறுத்தி வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்து ஆயிற்று. - கொடிபடு முத்தலைமேற் கூற்றக் கணிச்சிக் கடிபடு கொன்றையான் காப்ப - நெடிதுலகில் பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற - மாமலைபோன் மண்ணுக நீ. 226